லஞ்ச் பாக்ஸ் ரெசிபீ : எளிதில் சமைக்கலாம் புதினா சாதம் ( mint pulao )

Web Desk | news18
Updated: February 27, 2019, 11:15 PM IST
லஞ்ச் பாக்ஸ் ரெசிபீ : எளிதில் சமைக்கலாம் புதினா சாதம் ( mint pulao )
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 27, 2019, 11:15 PM IST
புதினா சளி, அஜீரணக் கோளாறு, வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நல்லத் தீர்வு. குறிப்பாக குழந்தைப் பெற்ற பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலிகளையும் நீக்க உதவுகிறது. பல் பிரச்னை, உடல் வலி என எல்லா வகைகளிலும் புதினா உடலுக்கு நன்மை அளிக்கிறது. அதனால் தினமும் புதினாவை உணவில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 tsp
இஞ்சி - 1/4 tsp (சீவியது )
பூண்டு - 3 பற்கள்
துருவிய தேங்காய் - 2 tsp
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1
பிரிஞ்சு இலை - பாதி அளவு
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது எண்ணெய் - 1 tsp
கூடுதல் புதினா இலைகள் மற்றும் முந்திரி - தாளிக்கசெய்முறை :

  • பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் சோறை பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும்.

  • அந்த சமயத்தில் ஜாரில் புதினா, கொத்தமல்லி, எலுமிச்சஒ சாறு, இஞ்சி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முன் கூட்டியே அரைத்து வைக்க வேண்டாம். கருத்துவிடும்.

  • கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஏலக்காய், இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்டை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதை 2 - 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

  • தற்போது அந்தக் கலவையில் ஆற வைத்துள்ள சோற்றை சேர்த்து நன்குப் பிறட்டவும். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

  • இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் ஃபிரெஷான புதினா இலைகளை சேர்த்துக் கிளரவும்.


குறிப்பு : தேவைப்பட்டால் சுவைக் கூட்ட உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டானியும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான புதினா சாதம் தயார்.
First published: February 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...