• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்ல நிறைய மாங்காய் இருக்கா..? அப்போ இன்னைக்கு மாங்காய் ரசம் வெச்சுடுங்க..!

வீட்ல நிறைய மாங்காய் இருக்கா..? அப்போ இன்னைக்கு மாங்காய் ரசம் வெச்சுடுங்க..!

மாங்கா ரசம்

மாங்கா ரசம்

ருசிக்க ஆசையா..? இதோ ரெசிபி..!

  • Share this:
    புளிப்பு சுவையில் காரசாரமாக மாங்காயில் ரசம் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? ருசிக்க ஆசையா..? இதோ ரெசிபி..!

    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - 1
    தண்ணீர் - 1/2 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    கடுகு - 1/2 tsp
    சீரகம் - 1 tsp
    கருவேப்பிலை - 1 ஸ்பிரிங்
    பச்சை மிளகா - 1
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    இஞ்சி - 1 இஞ்ச்
    பூண்டு - 3 பற்கள்
    தக்காளி - 1
    சீரகப் பொடி - 1 tsp
    எலுமிச்சை சாறு - 1 tsp
    மிளகுப் பொடி - 1/2 tsp
    மஞ்சள் 1 tsp
    தனியா பொடி - 1 1/2 tsp
    வெல்லம் - 1 tsp
    உப்பு - தே. அளவு
    கொத்தமல்லி - 5 ஸ்பிரிங்



    செய்முறை :

    மாங்காயை முழுதாக அப்படியே கழுவி குக்கரில் வைத்து 1/2 கப் தண்ணீர் வைத்து மூடிவிடுங்கள். 5 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். பின் தோலை நீக்கி. மாங்காயின் சதையை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக துவரம் பருப்பையும் வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    இரண்டையும் தனியாக வைத்துவிட்டு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் பொறிக்க அடுத்து பெருங்காயப்பொடி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி என போட்டு தாளிக்கவும். பூண்டை இடித்து போடவும்.

    வதங்கியதும் மாங்காய் சதை மற்றும் தக்காளியை கையிலேயே கரைத்து போடவும். அடுத்து எலுமிச்சைசாறு, மிளகுப்பொடி, மஞ்சள், சீரகப் பொடி, வெல்லம் ( தேவைப்பட்டால் ) வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு என சேர்த்து நன்குக் கலந்துகொள்ளவும்.

    தேவைக்கு ஏற்ப 2 கப் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.

    பின் கொத்தமல்லி தழைகளை நறுக்கி போடவும். அவ்வளவுதான் மாங்காய் ரசம் தயார்.

    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: