தவிர்க்க முடியாத சுவையில் தயிர் பக்கோடா குழம்பு!

வெள்ளை சோறுக்கு அருமையான பொருத்தம்

Web Desk | news18
Updated: February 22, 2019, 7:43 PM IST
தவிர்க்க முடியாத சுவையில் தயிர் பக்கோடா குழம்பு!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 22, 2019, 7:43 PM IST
தயிர் சாதம், மோர் குழம்பு, தயிர் குழம்பு என தயிரை பயன்படுத்திய எல்லா வகை உணவுகளையும் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் தயிர் பக்கோடா குழம்பு சப்பிட்டதுண்டா ? இதோ ரெசிபி உடனே நாளை மதிய உணவுக்கு சமைத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

தயிர் - 400 கிராம்


மஞ்சள் - 1/2 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp

Loading...

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 tsp
கடலை மாவு - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்

பக்கோடா செய்ய :

கடலை மாவு - 1 கப்
சீரகம் - 4 tsp
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
உப்பு - 1/2 tsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/4 tsp
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 2 tsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

  • கடாயில் பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் பொறித்து எடுக்கவும். அதைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் மஞ்சள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு, கரம் மசாலா பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொறிக்கவும். அடுத்ததாக பெருங்காயத் தூள், வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதோடு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிளையும் சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும். 25 நிமிடங்கள் நன்குக் கொதிக்க விடவும்.

  • ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அனைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவவும்.

First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...