ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கலக்கல் சுவையில் கடாய் பனீர்!

கலக்கல் சுவையில் கடாய் பனீர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சைவ உணவுப் பிரியர்களின் விருப்ப உணவு

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சைவ உணவுப் பிரியர்கள் பலருக்கும் பனீர் விருப்பமான உணவு. இரவு டின்னருக்கு சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்ற ரொட்டி வகை உணவுகளுக்கு கடாய் பனீர் நல்ல பொருத்தமான, சுவையான சைட் டிஷ். எளிமையாக வீட்டிலேயே சமைக்க குறிப்புகள் இதோ...

தேவையான பொருட்கள்:

பனீர் - 400 கிராம்

எண்ணெய் - 2 tsp

வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

வெண்ணெய் - 1 tsp

மசாலா பொடி தயாரிக்க:

மல்லித்தூர் - 1 tsp

மிளகு - 1/2 tsp

பட்டை - 1 துண்டு

பிரிஞ்சு இலை - 2 (பெரியது)

சீரகம் - 1 tsp

கிராம்பு - 4

காய்ந்த மிளகாய் - 4

அரைக்க மற்றும் தாளிக்க :

எண்ணெய் - 1 1/2 tsp

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - அரை துண்டு

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

வெண்ணெய் - 1 tsp

ஃப்ரெஷ் க்ரீம் - 1 tsp

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

கடாயில் வெண்ணெய் விட்டு பனீரை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக வறுக்க , காடாயில் எண்ணெய் விடாமல், தனியா, மிளகு, பட்டை, பிரிஞ்சு இலை, சீரகம், கிராம்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து அதை ஆர வைத்து மிக்ஸியில் மைய அரைத்து, தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொண்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி , பூண்டு, இஞ்சி, தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி அதையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அதே கடாயில் வெண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு, தக்காளி பேஸ்ட்டைக் கொட்டி நன்கு வதக்கவும்.

நீர் வற்றி கெட்டியானதும், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்துக் கொள்ளவும். அதையும் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்ததாக வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்ததும், வறுத்து வைத்துள்ள பனீரை சேர்த்து கிளரி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, அதன் மேல் ஃப்ரெஷ் க்ரீமை ஊற்றவும்.  சுவையானா கடாய் பனீர் தயார்.

First published:

Tags: Cookery tips, Paneer