பலாக்கொட்டையை பயன்படுத்தி புளிக்குழம்வு வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பலாக்கொட்டை - 1 கப்
புளித் தண்ணீர் - 1 கப்
பூண்டு - 8 பற்கள்
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
சாம்பார் பொடி - 2 tsp
பெருங்காயப் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 tsp
அரைக்க :
தேங்காய் - 1/2 கப்
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 2
வதக்கி அரைக்க
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனியா - 1 tsp
எண்ணெய் - 1 tsp
செய்முறை :
பலாக்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு குக்கரில் போட்டு 3 - 4 விசில் வர வேக வைக்கவும்.
கடாயை வைத்து எண்ணெய் விட்டு வதக்கி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஜாரைக் கழுவி மீண்டும் தேங்காய், காய்ந்த மிளகாய் என அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வீட்ல நிறைய மாங்காய் இருக்கா..? அப்போ இன்னைக்கு மாங்காய் ரசம் வெச்சுடுங்க..!
பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிந்ததும் பூண்டு போடவும். பூண்டு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி, மிளகாய் பொடி என கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள பலாக் கொட்டையை சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். குழம்பு உங்களுக்கு தேவையான பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தழைகளை நறுக்கி போடவும்.
அவ்வளவுதான் பலாக்கொட்டையில் புளிக்குழம்பு தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.