நொடியில் செய்து அசத்த பட்டாணி மசாலா குழம்பு : செய்முறை தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க..!

பட்டாணி மசாலா குழம்பு

இரவு தோசை, சப்பாத்திக்கு இந்த பட்டாணி மசாலா குழம்பு அருமையாக இருக்கும்.

 • Share this:
  இரவு தோசை, சப்பாத்திக்கு இந்த பட்டாணி மசாலா குழம்பு அருமையாக இருக்கும். எப்படி செய்வது என தெரிந்துகொள்ள கீழே ரெசிபி....

  தேவையான பொருட்கள்

  பச்சை பட்டாணி - 1 கப்
  வெங்காயம் - 1 கப்
  தக்காளி - 3/4 கப்
  இஞ்சி - 1 துண்டு
  பூண்டு - 4 பற்கள்
  பச்சை மிளகாய் - 1
  உப்பு - தே.அ
  எண்ணெய் + வெண்ணெய் - 2 tbsp

  மசாலா வகைகள்

  மஞ்சள் - சிட்டிகை
  மிளகாய் தூள் - 1 tsp
  தனியா தூள் - 2 tsp
  சீரகத்தூள் - 3/4 tsp
  கரம் மசாலா - 1 1/4 tsp

  தாளிக்க

  எண்ணெய் - 2 tbsp
  சீரகம் - 1 tsp  செய்முறை :

  எண்ணெய் மற்றும் வெண்ணெய்யை காய வையுங்கள்.

  பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

  இரண்டையும் காற்றாட விட்டு பின் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக குக்கர் வைத்து எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் அரைத்த பேஸ்டை சேர்த்து நன்கு வதக்கவும். சுருங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது மசாலா வகைகளை சேர்த்து பிரட்டவும்.

  காலை உணவுக்கு அசத்தலான சுண்டல் - நிமிடங்களில் செய்ய ரெசிபி இதோ...

  நன்கு வதக்கியதும் பட்டாணியை சேர்க்கவும். பின் கிளறி 1 கப் தன்ணீர் ஊற்றி உப்பு பதம் பார்த்து குக்கரை மூடிவிடுங்கள்.

  இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கவும். பின் பிரஷர் தானாக இறங்கியதும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  அவ்வளவுதான் பட்டாணி மசாலா தயார். காய்ந்த பட்டாணி எனில் காலையில் செய்ய இரவே ஊற வைத்துவிடுங்கள். இரவு எனில் எழுந்ததும் ஊற வைத்துவிடுங்கள்.
  Published by:Sivaranjani E
  First published: