உடலுக்கு ஆரோக்கியமான அரைச்சுவிட்ட பச்சை பயறு குழம்பு... டிரை பண்ணி பாருங்க

அரைச்சுவிட்ட பச்சை பயறு குழம்பு

வாரத்தில் ஒரு நாள் இப்படி குழம்பு வைத்து சாப்பிடுவதால் உங்களுக்கே தெரியாமலேயே உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் நல்லதாக இருக்கும்.

 • Share this:
  பச்சை பயறு உடலுக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடியது. எனவே வாரத்தில் ஒரு நாள் இப்படி குழம்பு வைத்து சாப்பிடுவதால் உங்களுக்கே  தெரியாமலேயே  உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் நல்லதாக இருக்கும்.

  தேவையான பொருட்கள் :

  பச்சைப்பயறு - 1 கப்
  புளி பேஸ்ட் - 1 tsp
  மஞ்சள் பொடி - 1/4 tsp
  சர்க்கரை - 1/2 tsp
  உப்பு - தே.அ
  வெங்காயம் - 1

  அரைக்க :

  தேங்காய் - 1/2 கப்
  காய்ந்த மிளகாய் - 2
  தனியா விதை - 1 tsp

  தாளிக்க :

  சமையல் எண்ணெய் -1 tsp
  கடுகு - 1 tsp
  பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
  கருவேப்பிலை - சிறிதளவு  செய்முறை :

  இந்த குழம்பு செய்யப் போகிறீர்கள் எனில் இரவே பச்சை பயறை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

  சமைக்க கடாய் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடுங்கள். பின் வெங்காயம். கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

  பின் சர்க்கரை, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த பச்சை பயறை நன்கு அலசி அதில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

  தாமரைப் பொரியில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸா..? குழந்தைகளுக்குக் கொடுத்தா அவ்வளவு நல்லது..!

  அடுத்ததாக புளி மஞ்சள் பொடு சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு தட்டு போட்டு மூடி வேக வையுங்கள்.

  அதற்கிடையில் தேங்காயை அரைத்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

  5 நிமிடங்கள் கழித்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள். தே.அ உப்பு சேர்த்து கலந்துவிட்டு பின் சுவை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

  எல்லாம் சரியாக வந்ததும் தட்டு போட்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். குழம்பு உங்களுக்குத் தேவையான அளவு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி விடுங்கள்.

  அவ்வளவுதான் அரைத்துவிட்ட பச்சை பயறு குழம்பு தயார். இதற்கு அப்பளம், பீட்ரூட் , கோஸ் பொரியல் அற்புதமாக இருக்கும்.
  Published by:Sivaranjani E
  First published: