இரும்பு சத்து நிறைந்த ஆட்டு ஈரல் தொக்கு எப்படி செய்வது தெரியுமா..?

ஆட்டு ஈரல் தொக்கு

இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

  • Share this:
ஆட்டு ஈரல்  (Goat Liver) இரும்புச் சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாடு இருந்தால் சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அதோடு இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். அதுவும் இப்படி ஆட்டு ஈரல் தொக்கு  (Goat Liver Fry) வைத்து சாப்பிட்டால் சப்பாத்தி , தோசை , இட்லிக்கு சாப்பிடலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆடு ஈரல் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி இலைகள் - 1/4 கை
புதினா இலைகள் - 1/4 கை
தயிர் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டிசெய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதக்கினால் போதுமானது.

பின் சுத்தம் செய்த ஈரலை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக மஞ்சள் சேர்த்து பிரட்டிக்கொண்டே இருங்கள். இதனால் ஈரலின் வாடை போய்விடும். அடுப்பு சிறு தீயில் இருக்க வேண்டும்.

நெல்லிக்காய் தித்திப்பு செய்யத் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..ரசகுல்லாவே தோத்து போயிடும்..!

அடுத்ததாக தக்காளி மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து வதக்கிவிட்டு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.

தண்ணீர் ஊற்றக் கூடாது. ஈரல் மற்றும் தக்காளி சாறு சேர்ந்து அதிலேயே தண்ணீர் நிற்கும். எனவே தண்ணீர் சேர்க்கக் கூடாது.

10 நிமிடங்கள் அப்படியே மூடிவிட்டு திறக்க தண்ணீர் நிறைந்திருக்கும். அப்போது கிளறி விட்டு மீண்டும் மூடி விடுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் ஈரல் வெந்து தண்ணீர் கொஞ்சம் வற்றி இருக்கும். அப்போது சீரகத்தூள் சேர்க்க வேண்டும்.

பின் மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ஆட்டு ஈரல் தொக்கு (Goat Liver Fry) தயார்.

 
Published by:Sivaranjani E
First published: