மெய்மறக்க வைக்கும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!

மதிய உணவை மனம் நிறைவன சுவையால் முழ்மையாக்குங்கள்.

Web Desk | news18
Updated: February 20, 2019, 6:37 PM IST
மெய்மறக்க வைக்கும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 20, 2019, 6:37 PM IST
மண் மனம் மாறாத எண்ணெய் கத்தரிக்காய் சுவையை நீங்களும் சுவைக்க வேண்டுமா? இதோ ரெசிபி... உடனே செய்து ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 10


சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1

Loading...

புளி - எலுமிச்சையின் அளவு
சிவப்பு மிளகாய் தூள் - 2 - 3 tsp
தனியா பொடி -2 tsp
புப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்கத் தேவையனவை

எண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1 tsp
வெந்தையம் - 2 சிட்டிகை
கருவேப்பிளை - சிறிதளவு

செய்முறை :

  • கத்தரிக்காயின் காம்புகளைக் கிள்ளாமல் அதன் அடிப்பகுதியில் X ஷேப்பில் நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை பயன்படுத்தும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  • அடுத்ததாக சிறிய கின்னத்தில் புளியை ஊற வைக்க வேண்டும்.

  • சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் தோல் உறித்து அவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் புளித் தண்ணீர், சிவப்பு மிளகாய், தனியா , மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும்.

  • கெட்டியான பேஸ்ட் போல் கலக்கியதும் அவற்றை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களின் இடையே ஸ்டஃப் போல் நிரப்பவும்.

  • பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம் சேர்த்து பொறிக்கவும். பின் சிறிய வெங்காயம், பூண்டு , கருவேப்பிளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

  • அடுத்ததாக மிளகாய் தூள் ஸ்டஃப் நிறைந்த கத்தரிக்காய்களைச் சேர்க்கவும்.

  • அடுத்ததாக, புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்துக் கிளரவும்.

  • இறுதியாக குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  • விசில் வந்ததும் குக்கரை இறக்கி கொத்தமல்லி தழைகளைத் தூவி விடவும்.

First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...