மாலையை இனிப்பாக்கும் இலை அடை

விடுமுறையின் மாலை நேரத்தில் சுட சுட காஃபியுடன் , ஆவி பறக்க சூடான ஸ்னாக்ஸ் கிடைத்தால் எப்படி இருக்கும்.

news18
Updated: February 23, 2019, 6:26 PM IST
மாலையை இனிப்பாக்கும் இலை அடை
மாதிரிப் படம்
news18
Updated: February 23, 2019, 6:26 PM IST
விடுமுறையின் மாலை நேரத்தில் சுட சுட காஃபியுடன் , ஆவி பறக்க சூடான ஸ்னாக்ஸ் கிடைத்தால் எப்படி இருக்கும். அதை அனுபவிக்க உடனே ஆவி பறக்க இந்த இலை அடை ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். மாலையை இனிப்பாக்குங்கள்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்


நெய் / எண்ணெய் - 1 tsp
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப

Loading...

பாகு தயாரிக்க

வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - கொதிக்க வைப்பதற்கு ஏற்ப

பூரணம் தயாரிக்க

நெய் - 2 tsp
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லப் பாகு
ஏலக்காய் பொடி - 1/2 tsp
வாழை இலை - அடை தட்டுவதற்குசெய்முறை :

முதலில் வெல்லப் பாகு தயாரிக்க, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை உடைத்துப் போடவும். அது நன்கு உறுகி தண்ணீரோடு கலந்து கொதிக்க ஆரம்பித்துவிடும். 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும். அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பூரணம் தயாரிக்கக் கடாயில் நெய்யை ஊற்றி துருவிய தேங்காயை போட்டு வதக்கவும். பின் வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை அதில் ஊற்றி கலக்கவும். அவை நன்குக் கலந்து கெட்டியான பூரணப் பதத்திற்கு வந்ததும் அணைத்து விடவும்.

அடுத்ததாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேவைக்கு ஏற்ப உப்பு போட்டு கொதிக்க விடவும். பின் பாத்திரத்தில் அரிசி மாவு கொட்டி சுடு நீரை ஊற்றி நன்கு பிசையவும். ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் சற்று தளதளவென இருக்குமாறு மாவைப் பிசைந்து கொள்ளவும்.

வாழை இலையை சதுர வடிவில் ஐந்து இலைகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒவ்வொன்றிலும் நெய் தடவி அதன் மேல் பிசைந்த மாவை எடுத்து  அடை போல்  தட்டவும். பின் அதன் மேல் ஒரு மேசைக் கரண்டி பூரணம் வைத்து அப்படியே இலையை மடித்து விடவும். இப்படியாக எல்லா இலைகளிலும் மாவை அடை போல் தட்டி பூரணம் வைத்து மடித்து விடவும்.

பின்  இட்லி குக்கரில் அந்த இலைகளை வைத்து 15 நிமிடங்கள் வேக விட்ட பின் இறக்கி விடவும்.
சுவையான இலை அடை தயார்.

Also Watch : 

First published: February 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...