Egg Pepper Masala | ருசியாக, ஈசியாக சமைக்கலாம் முட்டை பெப்பர் மசாலா.. ரெசிபி இதோ..

சப்பாத்தி, சாதம் என இரண்டு உணவுக்கும் பொருத்தமான ஒரு இன்ஸ்டண்ட் டிஷ், முட்டை பெப்பர் மசாலா..

Egg Pepper Masala | ருசியாக, ஈசியாக சமைக்கலாம் முட்டை பெப்பர் மசாலா.. ரெசிபி இதோ..
முட்டை பெப்பர் மசாலா
  • Share this:
முட்டை இருந்தாலே போதும் அதை வைத்து எப்படி வேண்டுமானாலும் சமைத்து அருமையான விருந்து பரிமாறிவிடலாம். அந்த வகையில் முட்டை பெப்பர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.  சாதத்திற்கும் வைத்துசாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 6


தேங்காய் எண்ணெய் - 2 tbsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
தக்காளி - 1வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகுப்பொடி - 3 tsp
சீரகப்பொடி - 1 tsp
தண்ணீர் - 3 கப்
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

முட்டைகளை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் விடுங்கள். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியபின் தக்காளி , பச்சைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகப்பொடி, மிளகுப்பொடி 2 ஸ்பூன் சேர்த்து வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முள்ளங்கி சாப்பிடுவது நல்லதா?

கலந்துவிட்டு தண்ணீர் 3 கப் ஊற்றி கொதிக்க விடுங்கள். கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

தண்ணீர் சுருங்கி வரும்போது 1 ஸ்பூன் மிளகுப்பொடி சேர்த்து கலந்துவிட்டு பின் முட்டைகளை இரண்டாக நறுக்கி குழம்பில் போட்டு மேலோட்டமாக வதக்கி எடுங்கள்.

2 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டால் முட்டையில் மசாலா இறங்கும் பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் முட்டை பெப்பர் மசாலா தயார்..
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading