Home /News /lifestyle /

முட்டை இருந்தால் போதும்... மாலை நேரத்தை இனிதாக்கும் ஈஸி ஸ்னாக்ஸ் இதோ..!

முட்டை இருந்தால் போதும்... மாலை நேரத்தை இனிதாக்கும் ஈஸி ஸ்னாக்ஸ் இதோ..!

முட்டை

முட்டை

Egg Fingers சமைத்து கொடுங்கள். ருசித்து உண்பார்கள்.

    முட்டை ஊட்டச்சத்து மிக்கது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதை வெவ்வேறு சுவைகளில் சமைத்துக் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எனவே இவ்வாறு Egg Fingers சமைத்து கொடுங்கள். ருசித்து உண்பார்கள்.

    தேவையான பொருட்கள் : 

    முட்டை - 3
    மிளகு - 1 ஸ்பூன்
    பிரெட் துண்டு - 5
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
    மைதா மாவு, சோள மாவு

     

     



    செய்முறை :

    முட்டைகளை உடைத்து அதில் மிளகு, உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஊற்றுங்கள். பாத்திரம் வானலியில் வைப்பதற்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.

    வானலியில் தண்ணீர் நிரப்பி அதற்குள் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த முட்டை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள். வானலியையும் மூட வேண்டும். முட்டை உள்ள பாத்திரத்தையும் மூட வேண்டும். தண்ணீர் மூழ்கும் அளவு இருக்கக் கூடாது. இப்போது இதை 25 நிமிடங்கள் சிறு தீயில் (Simmer) வைக்கவும்.

    பின் வெளியே எடுத்து சுற்றியும் கத்தியால் எடுத்துவிட்டு , பாத்திரத்தை தலைகீழாக திருப்பினால் முட்டை நன்கு வெந்து வட்ட வடிவில் கிடைக்கும். அவற்றை சிறு சிறு ஸ்லைஸுகளாக கட் செய்து கொள்ளுங்கள்.

    அடுத்ததாக மைதா மாவு மற்றும் சோள மாவு , தேவையான அளவு உப்பு மற்றும் உடைத்த காய்ந்த மிளகாய் பொடி தூவி கலக்கவும்.

    தற்போது பிரெண்ட் துண்டுகளை வறுத்து, அதை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கினால் பிரட் கிரம்ஸ் (Bread Crumbs) ரெடி. அதை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

    2 முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக நறுக்கிய முட்டையை மாவில் பிரட்டிக்கொள்ளுங்கள். அடுத்ததாக முட்டையில் நனைத்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

    வானலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் பிரட்டி எடுத்த முட்டைத் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுங்கள். சுவையான Egg Fingers ரெடி. இதற்கு டொமேடோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி