Home /News /lifestyle /

கோடைக்காலம் தொடங்கிடுச்சு.. முருங்கைக்காய் சீசனும் வந்துடுச்சு... இந்த அசத்தல் ரெசிபி செய்து பாருங்க..!

கோடைக்காலம் தொடங்கிடுச்சு.. முருங்கைக்காய் சீசனும் வந்துடுச்சு... இந்த அசத்தல் ரெசிபி செய்து பாருங்க..!

முருங்கைக்காய்

முருங்கைக்காய்

நோய் எதிப்பு சக்தி, ஜீரண சக்தி, ரத்தத்தை சீராக்குதல் , பாலியல் ஆரோக்கியம் என முருங்கைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.

    கிலோ 400, 500 ரூபாய்க்கு வாங்கியோர் இனி 10 ரூபாய்க்கு 4 காய் என முருங்கைக்காயை அள்ளிக் கொண்டு போவார்கள். கோடைக்காலம் என்றாலே முருங்கைக் காய்க்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    நோய் எதிப்பு சக்தி, ஜீரண சக்தி, ரத்தத்தை சீராக்குதல் , பாலியல் ஆரோக்கியம் என முருங்கைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட முருங்கைக்காய் சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 5
    வெங்காயம் - 3
    தக்காளி - 1
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - 1/2 ஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
    புளி - ஒரு துண்டு
    மஞ்சள் - 1/4 ஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை :

    முருங்கைக் காயை குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரைக் காத்திருங்கள். விசில் வந்ததும், பிரஷர் போனதும் முருங்கைக்காய்களில் உள்ள சதைப் பகுதியை மட்டும் சுரண்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப் பருப்பு போட்டு வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் வெங்காயம் போட்டு வதக்குங்கள். பின் தக்காளி போட்டு வதக்குங்கள். பச்சை மிளகாயும் சேர்த்துக்கொள்ளவும்.

    நன்கு வதக்குங்கள். பின் தனியாக எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதையை கொட்டி கிளறுங்கள். மஞ்சள் சேர்க்கவும். ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதிக தண்ணீர் வேண்டாம்.கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது சிறு தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் வற்றியதும் வடித்த சாதத்தை போட்டு நன்குக் கிளறுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் சாதம் ரெடி.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube





     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Food

    அடுத்த செய்தி