முருங்கைக்காய் வைத்து மட்டன் குழம்பு : மதிய உணவுக்கு அசத்தல் விருந்தாக இருக்கும்..!

முருங்கைக்காய் வைத்து மட்டன் குழம்பு

இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும். வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

 • Share this:
  புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளில் மட்டனும் ஒன்று. இது சுவையிலும் பலருடைய ஃபேவரெட் எனலாம். மட்டன் குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும்போது மட்டன் வாசனையும், முருங்கைக்காய் வாசனையும் சாப்பிடும் முன்னரே நாவில் எச்சில் ஊற வைக்கும். இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும். வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

  தேவையான பொருட்கள் :

  ஆட்டிறைச்சி - 1/4 கிலோ
  முருங்கைக்காய் - 3
  வெங்காயம் - 2
  தக்காளி - 2
  எண்ணெய் - 4 தேக்கரண்டி
  பச்சை மிளகாய் - 3
  உப்பு - 1/2 தேக்கரண்டி
  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  மிளகாய் தூள் -1/4 தேக்கரண்டி
  நீர்- 200 மிலி
  தேங்காய் - 3 துண்டுகள்
  கொத்தமல்லி - சிறிதளவு  செய்முறை :

  ஆட்டிறைச்சியை குக்கரில் போட்டு 6 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  தேங்காயுடன் ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

  பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்குங்கள்.

  ஓட்ஸ் கட்லெட் செய்யத் தெரியுமா..? இதோ ரெசிபி

  அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு , மிளகாய் தூள, தனியாத்தூள் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிவிட்டு பின் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.

  இப்போது வேக வைத்த மட்டனை தண்ணீரோடு சேர்த்து ஊற்றுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது அரைத்த தேங்காய் பேஸ்டை ஊற்றி கிளறிவிட்டு 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடுங்கள்.

  அவ்வளவுதான் மட்டன் குழம்பு தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: