ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாபா சுவையில் பனீர் மசாலா எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

தாபா சுவையில் பனீர் மசாலா எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

பனீர் மசாலா

பனீர் மசாலா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தாபா உணவுகள் எளிமையாக செய்யப்பட்டாலும் அதன் சுவை ரெஸ்டாரண்டையே விஞ்சும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் சப்பாத்திக்கு கொடுக்கும் பனீர் மசாலாவை ஒரு முறையேனும் சுவைத்திருக்கிறீர்களா..? அதை வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி

தேவையான பொருட்கள் :

பனீர் மசாலா ஊற வைத்து வறுக்க :

பனீர் - 250 கிராம்

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 tsp

மஞ்சள் - 1/4 tsp

கரம் மசாலா - 1/2 tsp

உப்பு - 1/2 tsp

எண்ணெய் - 2 tsp

வெண்ணெய் - 1 tsp

சமைக்க :

கடலை மாவு - 3 tsp

வெண்ணெய் - 1 tsp

பட்டை - 1 துண்டு

சோம்பு - 1 tsp

காய்ந்த மிளகாய் - 2

பிரிஞ்சு இலை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 3

மஞ்சள் தூள் - 1/2 tsp

மிளகாஉ தூள் - 2 tsp

தனியா தூள் - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

உப்பு - தே.அ

தயிர் - 2 tsp

கொத்தமல்லி - சிறிதளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் பனீர் சேர்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை சேர்த்து எண்ணெய் இறுதியாக விட்டு கலந்துகொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து வெண்ணெய் விட்டு பனீரை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துவிடுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து கடலை மாவை சூடேற்றி வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

அரிசி மாவு இல்லாமல் இன்ஸ்டன்ட் தோசை எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

பின் குழம்பு வைக்க கடாய் வைத்து வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை என மசாலா வகைகளை போட்டு வதக்குங்கள்.

பின் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். சிவக்க வதக்கிக்கொண்டு பின் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

தக்காளி சுருங்கியதும் தூள் வகைகளை சேர்த்து பிரட்டுங்கள். பின் தண்ணீர் , போதுமான உப்பு சேர்த்து கலந்துவிட்டு தட்டுபோட்டு மூடி கொதிக்க வையுங்கள்.

கொதித்து பச்சை வாசனை போனதும் வறுத்த பனீரை சேர்த்து பிரட்டி விடுங்கள். பின் மீண்டும் 5 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் பனீர் மசாலா தயார்.

First published:

Tags: Food, Paneer