நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுக் கோழி சூப்..!

வைரஸ் தொற்றுக்கள் பரவி வரும் காலத்தில், தக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக இருக்கும் வாய்ப்பு நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துவது மட்டுமே.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுக் கோழி சூப்..!
நாட்டுக் கோழி சூப்..!
  • Share this:
வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த நாட்டுக் கோழி சூப் வாரம் ஒரு முறை குடியுங்கள். எப்படி காரசாரமான சுவையில் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நாட்டுக் கோழிக்கறி - 250 கிராம்


வெங்காயம் : 1
தக்காளி - 1 பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tspஉப்பு - தே.அளவு
மிளகாய் பொடி - 1/2 tsp
தனியாப் பொடி - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
கரம் மசாலா பொடி - 1/2 tsp
தண்ணீர் - 3 கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

அரைக்க :

சீரகம் - 1/2 tsp
சோம்பு - 1/2 tsp
மிளகு - 1/2 tspசெய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ள்ளுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு 4 விசில்கள் வரும் வரை காத்திருக்கவும். கொத்தமல்லி தழைகளை போடாதீர்கள்.

4 விசில் வந்த பிறகு 10 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.

இறுதியாக குக்கரைத் திறந்ததும் கொத்தமல்லி தழைகளை நறுக்கி தூவவும்.

சுவையான சிக்கன் சூப் தயார்.

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்