நாவூறும் சுவையில், மணக்கும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு : கேரள சுவையில் ஒரு புடி புடிங்க..

நாவூறும் சுவையில், மணக்கும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு : கேரள சுவையில் ஒரு புடி புடிங்க..
தேங்காய் பால் மீன் குழம்பு
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 4:11 PM IST
  • Share this:
கேரள உணவு என்றாலே தேங்காய்தான் பிரதான உணவுப் பொருள். அதன் மணமே ஆளை கட்டி இழுக்கும். தேங்காய் பால் சுவையில் மீன் குழம்பு சாப்பிட்டு பார்த்துவிட்டால் என்ன..? இதோ ரெசிபி

தேவையான பொருட்கள் :

மீன் (குழம்புக்கு உகந்த எதுவாயினும்) - 1/2 கிலோ


சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவுதேங்காய் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு.

அரைக்க :

சின்ன வெங்காயம் - 3
தேங்காய் - 1.5 கப்
மஞ்சள் - 1/2 tsp
மிளகாய் தூள் - 3 tsp
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 tsp
தனியா பொடி - 1 tsp
வெந்தய பொடி - 1/2 tsp



செய்முறை :

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.

அதை சட்டியில் சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் கரைத்த புளி தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு போதுமான அளவு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் சுவை சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு அடுப்பில் அப்படியே வையுங்கள்.

சூப்பரான சுவையில் முருங்கைக்காய் குழம்பு எப்படி செய்வது தெரியுமா..?

கொதிநிலை வரும்போது கறிவேப்பிலை சேருங்கள். பின் சுத்தம் செய்து வறுத்து வைத்துள்ள மீன் ஒவ்வொன்றாக வையுங்கள்.

சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் தாளிக்க தேங்காய் எண்ணெய் , மீதம் உள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் சேர்த்து தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

இறுதியாக உணவு சாப்பிடும்போது திறங்கள். வாசனை கமகமக்கும்.

 

 

 
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading