காரசார சுவைக்கு சில்லி மட்டன்!

மிளகாய் சுவையில் காரசார ருசி

news18
Updated: March 7, 2019, 8:45 PM IST
காரசார சுவைக்கு சில்லி மட்டன்!
மாதிரிப் படம்
news18
Updated: March 7, 2019, 8:45 PM IST
மட்டனை எப்படி செய்தாலும் அது சுவை நிறைந்ததுதான். இருப்பினும் அதை இந்திய மசாலாக்களைக் கலந்து ருசிகரமாக நாவூற சமைத்து ருசித்தலின் அனுபவம் தனிச் சிறப்பு பெற்றது. அந்த வகையில் சில்லி மட்டனை இந்திய சுவையில் காரசாரமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் : 1 கப்
வெங்காயம் - 4
தக்காளி - 1
தக்காளி சாஸ் - 1 tsp
சோயா சாஸ் - 1/2 tsp
சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 tsp
சோள மாவு - 1 கப்
கரம் மசாலா பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் சாஸ் - 1/2 tsp
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
குடை மிளகாய் - 1 கப்
மஞ்சள் - 1/2 tsp
இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மட்டன் வேக வைத்த நீர் - 1 கப்செய்முறை :

  • மட்டனை சதுர வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வையுங்கள். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். மட்டன் வேகும் வரை விசில் விடவும்.
    மட்டன் வெந்ததும் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
    அடுத்ததாக தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • அடுத்ததாக மட்டன் மற்றும் நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளவும்.

  • வதங்கியதும், எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீரை ஊற்றுங்கள். நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும், கேசரி பொடி மற்றும் சோள மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் 5 நிமிடம் நன்குக் கிளறி இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள். சுவையான சில்லி மட்டன் தயார்.


இதற்கு சப்பாத்தி, நான், பரோட்டா என ரொட்டி வகை உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். உணவுடனும் பிசைந்தோ, சைட் டிஷ்ஷாகவும் உண்ணலாம்.
First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...