காரசார சுவையுடன் சில்லி மட்டனை சமைப்பது எப்படி?

சில்லி மட்டன் நெய் சோறு, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட உகந்ததாக இருக்கும்.

காரசார சுவையுடன் சில்லி மட்டனை சமைப்பது எப்படி?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 9, 2019, 7:37 PM IST
  • Share this:
வாரத்தில் ஒரு நாளாவது மட்டன் சாப்பிடவில்லை என்றால் சிலருக்கு திருப்தியே இருக்காது. அவர்கள் மட்டனை வெவ்வேறு விதமாக ருசித்திருக்கக் கூடும். ஆனால் சில்லி மட்டன் சுவைத்திருக்கிறீர்களா? இதோ அந்த ரெசிபி உங்களுக்காக...

தேவையான பொருட்கள்

மட்டன் - ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கவும்)


உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 4
தக்காளி - 1ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
தக்காளி சாஸ் - 1 tsp
சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 tsp
சோள மாவு - 1 கப்
கரம் மசாலா பொடி - 1/2 tsp
மிளகாய் பொடி - கார ருசிக்கு ஏற்ப
கறி மசாலா பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் சாஸ் - 1/2 tsp
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
குடை மிளகாய் - 1 கப் நறுக்கியது
மஞ்சள் பொடி - 1/2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
மட்டன் எலும்புத் துண்டு - 5  • செய்முறை : குக்கரில் நறுக்கிய மட்டன், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

  • வெந்ததும் மட்டன் நீரை வெளியே ஊற்றாமல் தனியாக எடுத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்க்கவும்.

  • அடுத்ததாக மிளகாய் சாஸ், கறி மசாலா பொடி, பச்சை மிளகாய் சாஸ், மஞ்சள் என எல்லா பொடிகளையும் சேர்க்கவும். பின் குடை மிளகாயையும் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அதோடு மட்டன் எலும்புத் துண்டுகளை சேர்க்கவும்.

  • அடுத்ததாக வேகவைத்த மட்டன் நீரை சேர்க்கவும். தொடர்ந்து சோள மாவு மற்றும் கேசரி பொடி சேர்க்கவும். கலவையை நன்றாக கிளறவும்.

  • இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியனைத் தூவி இறக்கிவிடவும். சுவையான சில்லி மட்டன் தயார்.


இது நெய் சோறு, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட உகந்ததாக இருக்கும்.
First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்