• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ’சில்லி எக்ஸ்’... இதுவரை சாப்பிட்டதே இல்லையா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

’சில்லி எக்ஸ்’... இதுவரை சாப்பிட்டதே இல்லையா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

சில்லி எக்ஸ்

சில்லி எக்ஸ்

வீட்டில் நூடுல்ஸ் , ஃபிரைட் ரைஸ் போன்ற சீன உணவுகள் சமைத்தால் அதற்கு பொருத்தமாக இந்த சில்லி எக்ஸ் செய்து கொடுங்கள்.

  • Share this:
    வீட்டில் நூடுல்ஸ் , ஃபிரைட் ரைஸ் போன்ற சீன உணவுகள் சமைத்தால் அதற்கு பொருத்தமாக இந்த சில்லி எக்ஸ் செய்து கொடுங்கள். அருமையாக இருக்கும். 

    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த முட்டை - 6
    எண்ணெய் - 1 tbsp
    பூண்டு - 2 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 1
    குடை மிளகாய் - 1
    காய்ந்த மிளகாய் - 6
    உப்பு - 1/4 tsp
    மிளகு - 1/2 tsp
    வினிகர் - 1 tsp
    சோயா சாஸ் - 2 tsp
    சில்லி சாஸ் - 1 1/2 tbsp
    டொமேடோ சாஸ் - 2 tbsp
    சோள மாவு - 1/4 கப்
    ஸ்பிரிங் ஆனியன்
    மைதா - 1/4 கப்



    செய்முறை :

    முதலில் மைதா மற்றும் சோள மாவு இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி அதோடு உப்பு மற்றும் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அதே அளவில் மைதா மற்றும் சோள மாவு மற்றொரு பாத்திரத்தில் கலந்து, உப்பு மற்றும் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து பஜ்ஜி மாவு போல் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    முட்டைகளை வறுக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

    தற்போது முட்டையை நான்கு பாகங்களாக அறுத்துக்கொள்ளுங்கள். அதை தற்போது மாவில் பிரட்டி எடுத்து பின் பஜ்ஜி மாவு போல் கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து காய்ச்சி வைத்துள்ள எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு பின் அதில் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிபோடுங்கள்.

    பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    Immunity | Health | மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த்தி லட்டுகள் - வீட்டிலேயே செய்யலாம்..

    அடுத்ததாக சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள். பின் உப்பு, மிளகு சேர்த்து வதக்குங்கள்.

    தற்போது அனைத்து சாஸ் வகைகளை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    தற்போது சோள மாவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து அதையும் ஊற்றிக்கொள்ளுங்கள். இது கெட்டிப்பதம் கிடைக்கும்.

    அடுத்ததாக வறுத்தெடுத்த முட்டையை சேர்த்து பிரட்டி எடுங்கள். இறுதியா ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறுங்கள்.

    சுவையான சில்லி எக்ஸ் தயார்..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: