• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எளிமையான முறையில் அசத்தல் சிக்கன் ஃபிரை : டிரை பண்ணி பாருங்க..அடிக்கடி செய்வீங்க..!

எளிமையான முறையில் அசத்தல் சிக்கன் ஃபிரை : டிரை பண்ணி பாருங்க..அடிக்கடி செய்வீங்க..!

சிக்கன் ஃபிரை

சிக்கன் ஃபிரை

வேலையை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் அதேசமயம் மதிய உணவும் குறையின்றி அசத்தலாக இருக்க வேண்டுமெனில் இந்த காம்போ சூப்பராக இருக்கும்.

  • Share this:
    சிக்கன் டிரை ஃபிரை சாம்பார் , ரசம் சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்-ஆக இருக்கும். வேலையை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் அதேசமயம் மதிய உணவும் குறையின்றி அசத்தலாக இருக்க வேண்டுமெனில் இந்த காம்போ சூப்பராக இருக்கும். டிரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - ½ கிலோ
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - ½ டீஸ்பூன்
    மஞ்சள் தூள்
    பெருஞ்சீரகத் தூள் - ¼ டீஸ்பூன்
    கஷ்மீரி மிளகாய் தூள் - ½ டீஸ்பூன் (விரும்பினால்)
    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - ¼ டீஸ்பூன்
    மிளகு - ½ டீஸ்பூன்
    கொத்துமல்லி தழை
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தே.அ



    செய்முறை :

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

    பின் வெங்காயம் , பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வதக்கியதும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் சேருங்கள். அதோடு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மசாலாவுடன் பிரட்டுங்கள்.

    தற்போது அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து , உப்பு சரி பார்த்துவிட்டு தட்டுப்போட்டு மூடி வேக வையுங்கள்.

    பாஸ்தா சமோசா டிரை பண்ணிருக்கீங்களா..? செம்ம டேஸ்ட்..இன்னைக்கே செய்து பாருங்க..!

    கொஞ்சம் வெந்ததும் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பிரட்டுங்கள். அதோடு மிளகுத் தூளும் தூவுங்கள்.

    மீண்டும் தட்டுப்போட்டு மூடி 5 நிமிடங்கள் வேக வையுங்கள்.

    திறந்து பார்க்க சிக்கன் நன்கு வெந்திருக்கும். அதன் மேல் கொத்தமல்லி தழை தூவுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவ்வளவுதான் க்ரிஸ்பியான சுவையில் சிக்கன் ஃபிரை தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: