அறுசுவை மிகுந்த செட்டிநாடு முட்டை மசாலா!

சுவை மட்டுமன்றி ப்ரோட்டீன்கள் நிறைந்த உணவு முட்டை.

Web Desk | news18
Updated: February 8, 2019, 2:57 PM IST
அறுசுவை மிகுந்த செட்டிநாடு முட்டை மசாலா!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 8, 2019, 2:57 PM IST
அசைவ உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட முட்டையை மட்டும் விரும்பி உண்பார்கள். சுவை மட்டுமன்றி ப்ரோட்டீன்கள் நிறைந்த உணவு முட்டை என்பதாலும் பலர் தினமும் உண்ணும் பழகம் கொண்டிருப்பார்கள். எனவே முட்டையை இன்னும் சுவையாக்க இதோ செட்டிநாடு ஸ்டைல் முட்டை மசாலா ரெசிபி உங்களுக்காக...

தேவையான பொருட்கள்

முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 tsp
Loading...
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் - 1/2 tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கடுகு - 1/4 tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 1
கருவேப்பிளை - சிறிதளவு

வறுக்க மற்றும் அரைக்க

சீரகம் - 1 tsp
மிளகு - 1 1/2 tsp
கிராம்பு மற்றும் ஏலக்காய் - 1
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 2 tsp
கசகசா - 1 tsp
முந்திரி - 4
தேங்காய் துருவியது - 3 tspசெய்முறை

  • முதலில் சீரகம் , மிளகு , கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், தனியா, கசகசா, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும். பின் அதில் சூடு போனதும் மிக்ஸியில் பேஸ்டாக மைய அரைத்துக் கொள்ளவும்.

  • அடுத்ததாக தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயையும் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

  • முட்டைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
    அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். அதில் கடுகு மற்றும் சீரகம் போட்டுக் பொறிக்கவும்.

  • பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி பேஸ்டை போட்டு வதக்கவும்.

  • ஊற்றிய எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும். அடுத்ததாக வறுத்து அரைத்த பேஸ்டை அதில் போடவும். குறைந்த அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  • கொதிநிலையை அடையும் போது வேகவைத்த முட்டைகளை அதில் போடவும்.

  • சிறு தீயில் 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.


சுவையான செட்டிநாடு முட்டை மசாலா ரெடி.  இது சாதத்துக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...