மாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான சீஸ் சாண்ட்விச் தோசை!

குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Web Desk | news18
Updated: February 2, 2019, 5:14 PM IST
மாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான சீஸ் சாண்ட்விச் தோசை!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 2, 2019, 5:14 PM IST
மாலை நேரத்தில் கொறிப்பதற்கு ஏதுமில்லை எனில் உடனே ஃபிரிஜ்ஜில் வைத்திருக்கும் மாவை எடுங்கள். பின்வரும் குறிப்புகளின்படி சமைத்துப் பாருங்கள். இதைவிட சுவையான ஸ்னாக்ஸ் வெறெதுவும் வேண்டாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு - 1 கரண்டி
தக்காளி - பாதி அளவு
வெங்காயம் - பாதி அளவு
வெள்ளரி - சிறிய துண்டு
மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
Loading...
சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப
புதினா சட்னி - 1 மேசைக் கரண்டி

செய்முறை

 • அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். (வழக்கமாக தோசை சுடுவதைப் போல்தான்).

 • அடுத்ததாக தோசையின் ஒரு புறத்தில் மட்டும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை  தூவவும். பின் ஸ்லைஸ் போல் தக்காளியை நறுக்கி அதை மேலே வைக்கவும். அதேபோல் வெள்ளரிக்காயையும் வைக்கவும். பின் சீஸை உங்கள் விருப்பம்போல் தூவி விடவும்.

 • தோசையின் மற்றொரு புறத்தில் புதினா சட்னியைத் தேய்க்கவும்.

 • அதன்மேல் மிளகுப் பொடியைத் தூவவும்.

 • தோசை வெந்ததும் புதினா தடவிய பகுதியை சீஸ் கலவை இருக்கும் பக்கமாக திருப்பி எடுக்கவும். பின் இருபுறமும் பக்குவமாக வாட்டி எடுக்கவும்.

 • சீஸ் சாண்ட்விச் தோசை தயார்.


அதை ஒரு பிளேட்டில் வைத்து சாண்ட்விச் போல் கத்தியால் வெட்டி சாஸ் கொண்டு சாப்பிடுங்கள்.
First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
 • I agree to receive emails from NW18

 • I promise to vote in this year's elections no matter what the odds are.

  Please check above checkbox.

 • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626