• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மூக்கடலையை வேக வைத்து அப்படியே சாப்பிடுவதை விட இப்படி சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்..!

மூக்கடலையை வேக வைத்து அப்படியே சாப்பிடுவதை விட இப்படி சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்..!

மூக்கடலை

மூக்கடலை

வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதைவிட இப்படி மசாலா கலந்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும். எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  • Share this:
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூக்கடலையையும் தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் அதை வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதைவிட இப்படி மசாலா கலந்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மூக்கடலை - 1 கப்
    பச்சை மிளகாய் - 1
    பெருங்காயத்தூள் - 1/4 tsp
    மிளகாய் தூள் - 1/2 tsp
    தனியா தூள் - 1/2 tsp
    உப்பு - தே.அ
    இஞ்சி - 1 tsp
    சீரகம் - 1 tsp
    சன்னா மசாலா - 1 tsp
    மஞ்சள் - 1/2 tsp
    மாங்காய் பொடி - 1/2 tsp
    வெஜிடபிள் எண்ணெய் - 2 tsp



    செய்முறை :

    மூக்கடலையை இரவே ஊற வைத்துவிடுங்கள்.

    பின் குக்கரில் கொட்டி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அதோடு மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வையுங்கள். 3 - 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    ஓட்ஸ் கட்லெட் செய்யத் தெரியுமா..? இதோ ரெசிபி

    தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள். பின் அதி; மாங்காய் பொடொ, தனியா தூள் , சன்னா மசாலா , பச்சை மிளகாய், இஞ்சை சேர்த்து சில நிமிடங்கள் வேக வையுங்கள்.

    பின் வேக வைத்த மூக்கடலையை தண்ணீரோடு சேர்த்து கிளறிவிட்டு தட்டுப்போட்டு சில நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். தண்ணீர் வற்றி டிரை ஆனதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவ்வளவுதான் மசாலா சன்னா தயார். இதை சப்பாத்தி , பூரிக்கும் சாப்பிடலாம். டீ டைமில் வெறுமனேவும் சாப்பிடலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: