மண் வாசனை மணக்கும் ‘கத்தரிக்காய் ரசவாங்கி’ செய்வது எப்படி ?

வெள்ளை சோறுக்கு சுவையான குழம்பு

மண் வாசனை மணக்கும் ‘கத்தரிக்காய் ரசவாங்கி’ செய்வது எப்படி ?
brinjal rasavangi
  • News18
  • Last Updated: February 5, 2019, 7:50 PM IST
  • Share this:
`கத்தரிக்காய்’ பொட்டாசியம் , விட்டமின் சி, இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துதல் என உடலுக்குப் பல நன்மைகள் தரக்கூடியது. எனவே வாரம் ஒருமுறை கத்தரிக்காய் உட்கொள்வது மிகவும் நல்லது. வெள்ளை சோறுக்கு சுவையான கத்தரிக்காய் ரசவாங்கி எப்படி செய்வது எனக் காணலாம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 5


துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 2 tsp
உப்பு / தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் - ஒரு சிட்டிகைவெல்லம் - சிறு கட்டி
புளி - எலுமிச்சை அளவிற்கு

வறுக்க மற்றும் அரைக்க

தனியா - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1.5 tsp
துருவிய தேங்காய் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை

குழம்பு கூட்டி வைக்க

எண்ணெய் - 1 tsp
கடுகு - 1/2 tsp
உளுந்தம் பருப்பு - 1/2 tsp
கருவேப்பிளை - 4 இலைகள்
கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை

  • பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் புளியையும் ஊறவைக்க வேண்டும்.

  • கடாயில் எண்ணெய் இல்லாமல் தனியா, உளுத்தம் பருப்பு, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவை சேர்த்து வறுத்துக் எடுத்துக்கொள்ளவும். பின் சூடு போகும் வரை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

  • பின் பெரிய பாத்திரத்தில் ஊற வைத்த பருப்பு சேர்த்து போதுமான அளவு நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் நறுக்கிய கத்தரிக்காயைப் போடவும். அடுத்ததாக புளிக் கரைசலை ஊற்றி கத்தரிக்காய் வேகும் வரை கொதிக்க விடவும். குழையக் கூடாது.

  • அடுத்ததாக மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும்.( அதிக வாசம் தேவைப்பட்டால் சாம்பார் பொடியும் போட்டுக் கொள்ளலாம்)
    தற்போது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்துக் கிளரவும்.

  • சிறிதளவு வெல்லமும் அதோடு சேர்த்துக் கொள்ளவும். நன்குக் கொதித்து பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி மூடி விடவும். சுவையான கத்தரிக்காய் ரசவாங்கி தயார்.

First published: February 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்