Home /News /lifestyle /

அருமையான சுவையில் போட்டி கறி.. எப்படி செய்யனும்..? தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க..!

அருமையான சுவையில் போட்டி கறி.. எப்படி செய்யனும்..? தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க..!

போட்டி

போட்டி

சப்பாத்தி, இட்லி, தோசைக்கு பொருத்தமான போட்டி கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
    சப்பாத்தி, இட்லி, தோசைக்கு பொருத்தமான போட்டி கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த போட்டி - ஒரு கப்

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    வெங்காயம் - 3

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது மசாலா பொடிகளை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள போட்டியை போட்டு நன்கு வதக்கவும்.

    தண்ணீரே ஊற்றாமல் சிறு தீ வைத்து போட்டியை கிளறிக்கொண்டே இருக்கவும். தண்ணீர் வற்றி மசாலாக்கள் கலந்து கெட்டியான கிரேவி பதம் வரும்போது அடுப்பை அனைத்துவிடவும்.

    சுட சுட ஆவி பறக்கும் இட்லிக்கு தொட்டு சாப்பிட்டால் அதைவிட சிறந்த அனுபவம் வேறு என்ன வேண்டும்..!




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி