நலமான உடலைப் பெற பாகற்காய் புளிக்குழம்பு!

உடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக பாகற்காய் செயல்படுகிறது.

நலமான உடலைப் பெற பாகற்காய் புளிக்குழம்பு!
உடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக பாகற்காய் செயல்படுகிறது.
  • News18
  • Last Updated: March 5, 2019, 2:52 PM IST
  • Share this:
பாகற்காயில் வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்திருக்கின்றன. இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. உடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. அதனால் குறைந்தது வாரம் ஒரு முறையேனும் பாகற்காயை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது உடனடியாக பாகற்காய் புளி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1


புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 tsp
தனியா பொடி - 1 1 tspமஞ்சள் - 1/4 1 tsp
உப்பு - தேவையான அளவு
தண்ணி - 1 கப்
தாளிக்க
எண்ணெய் - 2 1 tsp
கடுகு - 1/2 1 tsp
வெந்தையம் - 1/2 1 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 1 tsp
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிதளவுசெய்முறை :

  • புளியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
    பாகற்காயை விதைகளை நீக்கி ஸ்லைஸ் போல் நறுக்கிக் கொள்ளவும்.

  • பாத்திரத்தில் எண்ணெய் ஊறி கடுகு, வெந்தையம், உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிக்க விடவும். அடுத்ததாக உறித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலை மற்றும் பூண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி வதங்கியதும், பாகற்காய்களைச் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

  • தற்போது ஊற வைத்துள்ள புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அடுத்ததாக. சாம்பார் பொடி, தனியா பொடி, மஞ்சள் , தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கலவையை நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். தற்போது குழம்பை பச்சை வாசனைப் போகும் வரைக் கொதிக்க விடுங்கள்.

  • கொதித்ததும் அடுப்பை அனைத்து, சிறிதளவு கொத்தமல்லி தழைத் தூவி பறிமாறுங்கள்.

First published: March 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்