ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்!

வாழைத் தண்டு நார் சத்து நிறைந்தது.

news18
Updated: March 25, 2019, 9:10 PM IST
ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்!
வாழைத்தண்டு துவையல்
news18
Updated: March 25, 2019, 9:10 PM IST
வாழைத் தண்டு நார் சத்து நிறைந்தது. உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவக் கூடியது. இதை சமைத்து உண்ணாவிட்டாலும் இப்படி துவையலாக செய்து உணவிற்குத் தொட்டுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு - 1


காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு - 1 Tsp

Loading...

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 Tspசெய்முறை :

வாழைத்தண்டில் உள்ள நார்களை முற்றிலுமாக நீக்கிக் கொள்ளுங்கள். தயிரை மோர் ஆக்கி அதில் வாழைத்தண்டை ஊற வையுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, ஊற வைத்துள்ள வாழைத்தண்டை மோரிலிருந்து இறுக்கி கடாயில் கொட்டி வதக்கவும். அது நன்கு வேகும் வரை வதக்க வேண்டும். அதன் அளவு பாதியளவு குறைந்துவிடும். குறைந்த அளவு உப்பு சேர்த்தால் விரைவில் வெந்துவிடும்.

வெந்ததும் அதை காற்றோட்டமாக வைத்து வெப்பத்தை தனிய வைக்க வேண்டும்.

அடுத்ததாக வறுத்து வைத்துள்ள உளுந்தம்பருப்பு, மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதோடு புளியும் சிறிதளவு நீரும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக வேக வைத்த வாழைத் தண்டையும் சேர்த்து அரைக்கவும். நன்கு பேஸ்டாக அரைக்க வேண்டும்.

தற்போது தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் ஊற்றவும்.

சுவையான வாழைத்தண்டு துவையல் தயார்.

 
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...