• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருப்பையை வலுவாக்கும் வாழைத்தண்டு கூட்டு : ரெசிபி இதோ..!

கருப்பையை வலுவாக்கும் வாழைத்தண்டு கூட்டு : ரெசிபி இதோ..!

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு

ஜீரண சக்திக்கு உகந்தது, மலச்சிக்கல் பிரச்னை, சிறுநீரப்பையில் கல் என பல வகையான நன்மைகளைக் கொண்டது

  • Share this:
    வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் ஜீரண சக்திக்கு உகந்தது. அதோடு மலச்சிக்கல் பிரச்னை, சிறுநீரப்பையில் கல், பெண்களுக்கு கருப்பை வலுபெறுதல் என பல வகையான நன்மைகளைக் கொண்டது. வாழைத்தண்டு கூட்டு செய்து குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது.

    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1/2 கப்
    வாழைத்தண்டு - 2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கடுகு, உளுத்தம் பருப்பு - 1 tsp
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - 1/4 tsp
    மஞ்சள் - 1/4 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு , எண்ணெய் - தே . அளவு

    அரைக்க :

    துருவிய தேங்காய் - 3 tsp
    சீரகம் - 1 tsp
    காய்ந்த மிளகாய் - 3
    சோம்பு - 1/2 tsp
    தனியா - 1 tsp



    செய்முறை :

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல், கடாயில் வறுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின் குக்கரில் பருப்பு மற்றும் நறுக்கிய வாழைத்தண்டு இரண்டையும் போட்டு சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து மூடி விடுங்கள். 3 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்து பெருங்காயம் , காய்ந்த மிளகாய் சேருங்கள்.

    அடுத்ததாக வெங்காயம் போட்டு வதக்குங்கள். தக்காளி போடுங்கள்.கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    வதங்கியதும் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் வாழைத்தண்டு இரண்டையும் தண்ணீருடன் அப்படியே கொட்டவும்.

    படிக்க: 10 நிமிடத்தில் தர்பூசணியில் அல்வா : உடனே செய்து பாருங்கள்..!

    அடுத்ததாக அரைத்த பேஸ்டை சேர்த்துக் கிளறவும். உப்பு போடவும்.

    தற்போது பச்சை வாசனை போகும் வரை தட்டு போட்டு மூடி கொதிக்கவிடுங்கள். சிறு தீயில் கொதிக்க வையுங்கள்.

    அவ்வளவுதான் வாழைத்தண்டு கூட்டு தயார். இதை சாதத்திற்கு தொட்டுக்கொள்வது மட்டுமன்றி சப்பத்திக்குக் கூட தொட்டு சாப்பிடலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: