அறுசுவையுடன் கூடிய அவியல் செய்வது எப்படி!

அடை தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

news18
Updated: March 27, 2019, 12:38 PM IST
அறுசுவையுடன் கூடிய அவியல் செய்வது எப்படி!
அவியல்
news18
Updated: March 27, 2019, 12:38 PM IST
கூட்டுக் காய்கறிகளின் சுவை நாவிற்கு மட்டுமல்ல உடலுக்கும் நல்லது. அதுவும் வேக வைத்து உண்பதில் கூடுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது.  அவியல் எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காய்கறிகளின் கலவை - 2 கப்


தயிர் - 1/4 கப்
தேங்காய் எண்ணெய் - 1 tsp
பச்சை மிளகாய் - 2

Loading...

உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவியது - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 3/4 tsp
அரிசி மாவு - 1/2 tsp
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 tsp ( தேவைபட்டால் ) 

செய்முறை :

காய்கறிகளை கழுவி நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின் காய்கறிகளை குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும். சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
அது வெந்து கொண்டிருக்கும் சமயத்தில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

பின் வெந்த காய்கறியில் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிநிலையை அடையும் போது அனைத்துவிடவும். தற்போது அதில் தயிர் ஊற்றி கலக்கவும்.

தனியாக கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துப் பொறிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவியலில் ஊற்றவும்.

சுவையான அவியல் தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம். அடை தோசைக்கு சிறப்பாக இருக்கும்.
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...