அவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

அவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
அவரைக்காய் பொரியல்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 11:10 PM IST
  • Share this:
இந்த அவரைக்காய் பொரியல் காரக்குழம்பு , மிளகு குழம்பு, பூண்டு குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 250 கிராம்


கடுகு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
பூண்டு - 5வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 tsp
மிளகாய் தூள் - 1 tsp
உப்பு - தே.அ
துருவிய தேங்காய் - 1/2 கப்



செய்முறை :

அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள். பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

பின் அவரைக்காயை சேர்த்து கிளறுங்கள். அடுத்ததாக மஞ்சள் மற்றும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறுங்கள்.

சூப்பரான சுவையில் முருங்கைக்காய் குழம்பு எப்படி செய்வது தெரியுமா..?

தட்டுப்போட்டு மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.

வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் அவரைக்காய் பொரியல் தயார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading