Home /News /lifestyle /

அவல் வடை செய்ய தெரியுமா..? மாலை ஸ்நாக்ஸுக்கு சூப்பரா இருக்கும் டிரை பண்ணி பாருங்க..!

அவல் வடை செய்ய தெரியுமா..? மாலை ஸ்நாக்ஸுக்கு சூப்பரா இருக்கும் டிரை பண்ணி பாருங்க..!

அவள் வடை

அவள் வடை

செஞ்சு கொடுத்துப் பாருங்க.... மாலையில் டீயுடன் ஜம்முனு சாப்பிடுவாங்க...

    கடலை பருப்பு வடை, உளுந்த வடை சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு வித்தியாசமான சுவையில் அவல் வடை செய்து கொடுங்கள். மாலையில் டீயுடன் ஜம்முனு சாப்பிடுவாங்க...

    தேவையான பொருட்கள்

    அவல் - 1 கப்
    கடலை மாவு - 2 tbsp
    அரிசி மாவு - 2 tbsp
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 tsp
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    கருவேப்பிளை, கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1/2 tsp
    உப்பு - தே. அ



    செய்முறை :

    வெள்ளை அவலை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை நன்கு இறுகி எடுத்துக்கொள்ளுங்கள்.

    அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சரியான அளவில் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    ரீஃபைண்ட் ஆயிலை விட செக்கு எண்ணெய் சிறந்தது.. ஏன் தெரியுமா?

    பின் கடாய் வைத்து எண்ணெய் போதுமான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்தவுன் வடை போல் தட்டி அதில் போட்டு சுட்டு எடுங்கள்.

    வடை பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் அவல் வடை தயார்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி