பரோட்டாவுக்கு பொருத்தமான மட்டன் பாயா செய்வது எப்படி ?

நாவூறும் சுவையில் நல்லி எலும்பை கடித்து ருசிக்கலாம்

Web Desk | news18
Updated: March 9, 2019, 7:18 PM IST
பரோட்டாவுக்கு பொருத்தமான மட்டன் பாயா செய்வது எப்படி ?
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: March 9, 2019, 7:18 PM IST
பரோட்டா என்றாலே அதற்கு சரியான பொருத்தம் மட்டன் பாயா தான். அதுவும் பிச்சு போட்டு அதில் சுற்றிலும் ஊற்றி ஊற வைத்துச் சாப்பிடும் சுவை அலாதியானது. இதை விக்ரம் வேதா படத்திலும் விஜய் சேதுபதி இரு முறைச் சொல்லக் கேட்டிருப்போம். அந்த சுவையை வீட்டிலேயே சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் நல்லி எலும்பு - 8
மஞ்சள் - 1 tsp
சிவப்பு மிளகாய் பொடி - 1 tsp
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய், கிராம்பு, பட்டை , பிரிஞ்சு இலைகள் - 1
தேங்கயா - ஒரு கப்
கசகசா - 1 tsp
சோம்பு - 1 tsp
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 tsp
தனியா பொடி - 1/2 tsp
சீரகப் பொடி - 1/2 tsp
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவுசெய்முறை :

நல்லி எலும்பை நன்கு சுத்தம் செய்து கொதிக்க வைத்த நீரில் அலசி எடுக்கவும்.

பாத்திரத்தி நல்லி எலும்போடு உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக sஓம்பு, கசகசா மற்றும் ஒரு கப் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, இலை ,ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதோடு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பொடிகளை சேர்த்துக் கொள்ளவும். அதோடு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவை நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காக் கலவையை சேர்த்துக் கொள்ளவும்.

தற்போது ஊற வைத்துள்ள நல்லி எலும்புகளைச் சேர்த்து நன்குக் கலங்குங்கள்.

அடுத்ததாக 7 கப் தண்ணீர் ஊற்றி குக்கர் விசிலை மூடிவிடுங்கள். 12 விசில் வரும் வரை காத்திருந்து பிரெஷர் போனதும் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி தழை தூவிப் பரிமாறுங்கள்.
First published: March 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...