கொரோனா அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்னதான் பாதுகாப்பான முறையில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றைப் பயன்படுத்தும் முன் சுத்தமாகக் கழுவி பயன்படுத்தி சமைக்க வேண்டும். எப்படி என்று பார்க்கலாம்.
கீரை வகைகள் : கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.
வேர் வகைக் காய்கள் : கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி , ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள்.
காளான் பயன்படுத்தால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால் கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.
இவை தவிற பீன்ஸ் , அவரை , தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.
பழங்களை வாங்கி வந்தாலும் வெதுவெதுப்பான நீரில் அலசுவது அவசியம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.