வாரம் ஒரு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும். வாழைப்பூவை வேக வைத்து பொரியல் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். ஆனால் இதனை ஆய்வது நேரம் ஆகும் மற்றும் சிரமமாக இருக்கும் என்று இன்றைய பெண்கள் யாரும் வாங்கி சமைப்பது இல்லை. இன்னும் நிறைய பேருக்கு இந்த வாழைப்பூவை எப்படி அரிவது என்றுக்கூட தெரிவதில்லை. அதனால் இந்த பதிவில் அதனை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மோர் - 2 டேபிஸ்ஸ்பூன்
எண்ணெய் அல்லது உப்பு - கையில் தடவிக் கொள்ளவும்
வாழைப்பூவை சுத்தம் செய்யும் முறை
1. முதலில் கையில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீரை தடவிக் கொள்ளவும்.
2. அதன் பின்னர் வாழைப்பூவை எடுத்து அதன் ஒவ்வோர் இதழையும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.
3. அதன் பின் பூவினை மொத்தமாக எடுத்து அதன் முனையில் கையால் தீட்டினால் பூக்கள் மலரும்.
4. அந்த ஒவ்வொரு பூக்களிலும் நரம்பு இருக்கும். அதனை எடுத்து விட வேண்டும். காரணம் அது வேக வைத்தாலும் வேகாது. வயிற்றுக்கும் நல்லது இல்லை.
5. இந்த நரம்பை வாழைப்பூ வெள்ளை கலர் வரும் வரைதான் எடுக்க வேண்டும். வாழைப்பூவின் நுனி பகுதியில் நரம்புகள் இருக்காது. அதனால் அதனை எடுக்க தேவையில்லை.
6. அதன் அருகிலேயே ரப்பர் போன்ற மற்றொரு இதழ் இருக்கும். அதனையும் நீக்கிவிட வேண்டும்.
6. இப்போது வாழைப்பூவை பொடியாக அரிய வேண்டும்.
7. அவ்வாறு அரிந்த வாழைப்பூவை மோர் கலந்த நீரில் போட்டு வைத்து நன்றக கழுவ வேண்டும்.
8. பின்னர் இதனை சமைக்கலாம்.
பின் குறிப்பு:
1. கையில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீர் தடவிக்கொண்டு வாழைப்பூவை அரிவதால் கையில் கறை பிடிக்காது.
2. அதுமட்டுமல்லாமல் மோர் கலந்த நீரில் அரிந்த வாழைப்பூவை போடுவதால் பூ கறுக்காது. ஃப்ரெஷாகவே இருக்கும். அதனை பொரியல் செய்யும் போது நல்ல வெள்ளை நிறமாக பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food