• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உருளைக்கிழங்கு வாங்கும் போது அவை நல்லதா என்பதை எப்படி பார்த்து வாங்குவது?

உருளைக்கிழங்கு வாங்கும் போது அவை நல்லதா என்பதை எப்படி பார்த்து வாங்குவது?

மாதிரி படம்

மாதிரி படம்

உருளைக்கிழங்கை வாங்கிய பிறகு மற்ற காய்கறிகளை போல அதனை கழுவ வேண்டாம். ஏனெனில் இதன் குறைந்த ஈரப்பதம் காரணமாக நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க முடியும்.

  • Share this:
சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் பிற மளிகை பொருட்களை வாங்குவது என்பது ஒரு தனிக்கலை. காய்கறி புதியதா, அல்லது பழம் இனிப்பாக இருக்குமா என்பதைப் புரிந்து கொள்ள ஒருவருக்கு திறமையும் அனுபவமும் தேவைப்படுகிறது. வழக்கமான மளிகை கடை செல்லும் எந்தவொரு நபரிடமும் கேளுங்கள், இறால் புதியதா, அல்லது இறைச்சி துண்டு குளிர்ச்சியாக இருக்கிறதா என்பதை அவர்கள் உடனடியாக அடையாளம் காண்பார்கள்.

எப்படி, நீங்கள் கேட்கிறீர்களா? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது எல்லாம் சில அடிப்படை உதவிக்குறிப்புகள் மற்றும் சில ட்ரிக்ஸ் தான். பொதுவாக காய்கறி வாங்கும்போது கூட அவை நல்லதா என்பதை பார்த்து வாங்குவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அதாவது வெண்டைக்காய்யை முத்தல் இல்லாமல் வாங்கிவதற்கு அதனை உடைத்து பார்த்து வாங்க வேண்டும். முருங்கைக்காயை முறுக்கி பார்த்து வேண்டும். தேங்காயை தட்டி பார்த்து வாங்கவேண்டும். இப்படி ஒவ்வொரு காய்கறிகளையும் தேர்வு செய்ய ஒரு சில முறைகள் இருக்கிறது. அதேபோல தான் உருளைக்கிழங்கை தேர்வு செய்வதிலும் ஒரு சில வழிமுறை இருக்கிறது.



பெரும்பாலும் உருளைக்கிழங்கு அனைத்து வீட்டிலும் சேமிக்கப்படும் ஒரு காய்கறியாகும். மேலும் அதனை கிலோ கணக்கில் வாங்கி ஒரு வாரம் கூட பிரிட்ஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். இருப்பினும், நாம் வாங்கிய சில கிழங்குகள், தோல் சுருங்கியும், கெட்டுப்போனது போல் காணப்படும். இதற்கு காரணம், நாம் கடைகளில் வாங்கும் பொது ஒழுங்காக கவனித்து வாங்கவில்லை என்பது தான். அப்படியானால் காய்கறி கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கினை நல்லதா என்பதை எப்படி பார்த்து வாங்குவது?. இது குறித்து சமையல் நிபுணர் குணால் கபூர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Kunal Kapur (@chefkunal)






உருளைக் கிழங்கினை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. உருளைக்கிழங்கு உறுதியாகவும் கெட்டியாகவும் இருக்கிறதா என்று எப்போதும் சரிபார்க்கவும். மென்மையானவற்றை வாங்க வேண்டாம். அதனை கொஞ்சம் அழுத்தி பார்த்தாலே தெரியும்.

2. உருளைக்கிழங்கு கணுக்களில் முளை விட்டுருந்தால் அவற்றை வாங்கக்கூடாது.

காளான் பிரியரா நீங்கள்? எப்போது, எப்படி , எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா..?

3. உருளைக்கிழங்கில் ஏதேனும் ஒரு சிறிய பகுதி பச்சை நிறத்தில் இருந்தால் கூட வாங்கக்கூடாது.

4. உருளைக்கிழங்கை வாங்கிய பிறகு மற்ற காய்கறிகளை போல அதனை கழுவ வேண்டாம். ஏனெனில் இதன் குறைந்த ஈரப்பதம் காரணமாக நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க முடியும். ஈரப்பதம் அதிகமானால் உருளைக்கிழங்கை வேகமாக வீணாக்கிவிடும்.

மேற்கண்ட உத்தவிக்குறிப்புகளை கொண்டு சந்தைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்குகளை நல்லதா? இல்லையா? என்பதை கவனமாக தேர்வு செய்யுங்கள்.

 

 

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: