Home /News /lifestyle /

30 நொடியில் கண்களிலிருந்து தண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது சாத்தியமா..? இந்த வீடியோவை பாருங்க...

30 நொடியில் கண்களிலிருந்து தண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது சாத்தியமா..? இந்த வீடியோவை பாருங்க...

வெங்காயத்தை எளிமையாக வெட்டி காட்டும்  வீடியோ

வெங்காயத்தை எளிமையாக வெட்டி காட்டும் வீடியோ

சமைப்பவர்களுக்கு மிகவும் கடினமான பணி என்றால் அது வெங்காயம் வெட்டுவதுதான். வெங்காயம் வெட்டும்போது மக்கள் அழுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய சமையல்காரர்களால் கூட வெங்காயத்தை எளிதாக வெட்டுவதற்கான வழிகளை கண்டறிய முடியவில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காய்கறிகளின் சுவையை அதிகரிக்க வெங்காயம்தான் பிரதானம். வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் சாப்பிட எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அவ்வளவு 'அழுகை' அதை வெட்டும் போது வரும்... சமைப்பவர்களுக்கு மிகவும் கடினமான பணி என்றால் அது வெங்காயம் வெட்டுவதுதான். வெங்காயம் வெட்டும்போது மக்கள் அழுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய சமையல்காரர்களால் கூட வெங்காயத்தை எளிதாக வெட்டுவதற்கான வழிகளை கண்டறிய முடியவில்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெங்காயத்தை நறுக்கும் போது 'கண்ணீர்' வழியாமல் இருக்க, வெங்காயத்தை வெட்டுவதில் பல தந்திரங்களும், வேடிக்கை வீடியோக்களும் அடிக்கடி வெளிவருகின்றன.

    சமீபத்தில், வெங்காயத்தை எளிமையாக வெட்டி காட்டும் ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் வெங்காயத்தை வெட்டுவதற்கான மிகவும் எளிதான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவில், வெங்காயம் 30 வினாடிகளுக்குள் எளிதாக நறுக்கப்படுகிறது.




    வெங்காயம் வெட்டும் வைரல் வீடியோ

    சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வெங்காயம் நறுக்கும் வீடியோ நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி அதன் பலனும் சிறப்பாக உள்ளது. சமையல் புத்தக எழுத்தாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான மெலனி லியோனெல்லோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வெங்காயம் நறுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், வெங்காயத்தை 30 வினாடிகளுக்குள் மிக எளிதான முறையில் வெட்டி காட்டுகிறார்.

    வீட்டில் வெங்காயத்தை இதுப்போன்று வைத்தால் அழுகிவிடாமல் நீண்ட நாள் இருக்கும்!

    வெங்காயம் வெட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் இதுவரை 805K க்கும் அதிகமானோர் வீடியோவை விரும்பியுள்ளனர். இதிலிருந்தே வெங்காயத்தை வெட்டுவதில் பலருக்கும் இருக்கும் ஆர்வத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. நீங்களும் விரும்பினால், இந்த வீடியோவின் முறையை முயற்சித்து இந்த சமையலறை ஹேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Onion

    அடுத்த செய்தி