பால், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு, மசாலா போன்ற உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது போய் இப்போது, காய்கறிகளிலும் கலப்படம் என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் உண்மையான மற்றும் போலி உணவுப்பொருட்களை கண்டறிவது மிகவும் கடினமாகிவிட்டது. அதிலும் புதிய பிரெஷான கீரையின் இலைகள், பச்சை காய்கறிகள் என்று வரும்போது அவை உண்மையில் கலப்படமற்றவையா என்பதை கண்டறிவது மிக மிக கடினம்.
ஏனெனில், தற்போது காய்கறிகள் எப்போதும் பச்சையாகவும் பிரஷாகவும் இருக்க அவற்றில் மலாக்கிட் க்ரீன் (Malachite Green) எனும் கெமிக்கல் கலக்கப்பட்டு வருகின்றன. கலப்படம் செய்யப்பட்ட காய்கறி மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் சரியான மற்றும் கலப்படமில்லாத காய்கறிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம். தற்போது உங்களுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பச்சை காய்கறிகளில் மலாக்கிட் க்ரீன் கலப்படத்தை அடையாளம் காண உதவும் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளது. அந்த செயல்முறைகளை செய்வதன் மூலம் நாம் இப்போது கலப்படம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் கலப்படமில்லாத காய்கறிகளை வேறுபடுத்த முடியும். சரி அதற்கு முன்பு இந்த கெமிக்கல் பற்றி தெரிந்து கொள்வோம்.
Must Read | நீங்க ஹெல்தியா இருக்கீங்களா? கண்டுபிடிக்க உங்க முகத்தை செக் பண்ணுங்க..! சுவாரஸ்ய தகவல்கள்
மலாக்கைட் க்ரீன் என்றால் என்ன? Britannica.com படி, மலாக்கிட் க்ரீன், அனிலைன் க்ரீன், பென்சால்டிஹைட் க்ரீன் அல்லது சீனா க்ரீன் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கிருமி நாசினிக்கான நீர்த்த கரைசலில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு அவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து Britannica.com வலைத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மலாக்கிட் பச்சை பூஞ்சை மற்றும் கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். மீன் வளர்ப்புத் தொழிலில், முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளைக் கொல்லும் நீர் அச்சு, சப்ரோலெக்னியா என்ற பூஞ்சையைக் கட்டுப்படுத்த இவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீர்வாழ் பூஞ்சைகளை கொள்ளும் நோக்கத்திற்காக மட்டும் இவை பயன்படுத்தப்படுவதில்லை. மிளகாய், பட்டாணி மற்றும் கீரை உற்பத்தியிலும் மலாக்கிட் பச்சை பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை பசுமையாகவும், பச்சையாகவும், புதியதாகவும் பார்க்க அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அவை ஏன் ஆரோக்கியமற்றது? சாயத்தின் நச்சுத்தன்மை நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றை அதிகரிக்கிறது என்று உயிரி தொழில்நுட்ப தகவலுக்கான தேசிய மையம் (NCBI) கூறியுள்ளது. இது கார்சினோஜெனெசிஸ், மியூட்டஜெனெசிஸ், குரோமோசோமால் எலும்பு முறிவு, டெரடோஜெனசிட்டி மற்றும் சுவாசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில், இந்த கெமிக்கல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மலாக்கிட் பச்சை நிறத்தின் மோசமான விளைவுகளை பற்றியும் FSSAI ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும், காய்கறிகளில் இந்த கெமிக்கல் கலவை இருக்கிறதா என்பதை கண்டறியும் வழியையும் விளக்கியுள்ளது.
Must Read | உங்களுக்கு இரத்த சர்க்கரை இருக்கா? இந்த 5 ’சூப்பர்ஃபுட்’களை ட்ரை பண்ணுங்க..!
FSSAI வெளியிட்ட வீடியோ ஒரு எளிய சோதனையை நடத்த பரிந்துரைக்கிறது. அதில், திரவ பாரஃபினில், ஒரு துண்டு காட்டனை நனைத்துக்கொண்டது. மேலும் மலாக்கிட் பச்சை கலக்கப்பட்ட வெண்டைக்காயையும், எந்த கலப்படமும் உள்ளதா அசல் வெண்டைக்காயையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டனர். இப்பொது திரவ பாரஃபினில் நனைக்கப்பட்ட காட்டனை எடுத்து கெமிக்கல் கலக்காத வெண்டைக்காயில் தேய்த்துள்ளனர். காட்டன் எந்த நிறத்திலும் மாறவில்லை. அதுவே, கெமிக்கல் கலந்த வெண்டைக்காயில் காட்டனை தேய்த்த போது அது பச்சை நிறத்தில் மாறியது. இதன் மூலம், காய்கறிகள் கலப்படம் நிறைந்ததா என்பதை எளிதில் கண்டறியலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food Adulteration, Healthy Food, Vegetables