• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் பயன்படுத்துவது ஒரிஜினல் தேன் தானா என்ற சந்தேகம் இருக்கிறதா ? இதை செய்து பாருங்கள்..

நீங்கள் பயன்படுத்துவது ஒரிஜினல் தேன் தானா என்ற சந்தேகம் இருக்கிறதா ? இதை செய்து பாருங்கள்..

தேன்

தேன்

நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் தேன் ஒரிஜினலா அல்லது கலப்படமா என்பதை கண்டுபிடிக்க இதை செய்து பாருங்கள்.

  • Share this:
    அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் a centre for science and environment சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் தேன்களின் கலப்படம் குறித்த ஆய்வுகளும் எடுக்கப்பட்டன. அதில் சில முக்கிய பிராண்டுகள் தேனில் கலப்படம் செய்தது வெட்டவெளிச்சமானது. அந்த ஆய்வில் சில பிராண்டுகள் தேனில் சர்க்கரை சிரப்பு கலப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் சில சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பிராண்டுகளாகவும், சில இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பிராண்டுகளாகவும் உள்ளன.

    சுத்தமான தேன் என்பது ஊட்டச்சத்து மிக்கதாகவும், கொழுப்பு நீக்கப்பட்டதாகவும் இருக்கும். குறிப்பாக ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டிபாக்டீரியல் பண்புகள் நிறைவாக இருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தேன் வகைகள் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தால் உடல் நலத்திற்குக் கேடு என்று கூறப்படுகிறது. அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடும். அதேபோல் உடல் பருமன் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    எனவே அடுத்த முறை தேன் வாங்கும்போத்ய் அது கலப்படமற்ற தூய தேன் தானா என கண்டறிந்து வாங்குங்கள் அல்லது வீட்டில் தற்போது பயன்படுத்தி வரும் தேன் ஒரிஜினல்தானா என கண்டறியுங்கள். அதற்கு இந்த டெஸ்ட் செய்து பாருங்கள்.



    இந்த டெஸ்டானது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் சுத்தமான தண்ணீரை ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 சொட்டு தேனை விடுங்கள். தேன் அப்படியே தண்ணீருக்குள் கெட்டிப்பதத்திலேயே கீழே சென்று விழுந்தால் அது சுத்தமான கலப்படமற்ற தேன்.

    Also Read : இது தெரியாமல் மீன் வாங்க செல்லாதீர்கள்.. நல்ல மீன்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் ?

    ஒருவேளை அந்த தேன் ஊற்றிய உடனேயே தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து நீரில் நிறம் மாறினால் அது கலப்படம் நிறைந்த தேன். எனவே அடுத்தமுறை இந்த சோதனையை செய்து பார்த்து தேன் வாங்குங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: