ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World egg day 2022 : முட்டை உடையாமல் சரியான பதத்தில் எப்படி வேக வைக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

World egg day 2022 : முட்டை உடையாமல் சரியான பதத்தில் எப்படி வேக வைக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

முட்டை

முட்டை

முதலில் முட்டையை அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும். முட்டையைவிட ஒரு இஞ்ச் அளவுக்கு நீர் அதிகமாக இருக்க வேண்டும். முட்டையை வேக வைக்கும்போது அடுப்பின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை தினமும் உட்கொண்டாலும் அது உடலுக்கு நன்மையே. முட்டையைப் பொருத்தவரை அதை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். அதை எப்படிச் சமைத்தாலும் அதன் சுவை மாறாது. இதன் சிறப்பும் அதுதான்.

முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு. இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள். முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது.

முட்டையை எப்படி வேக வைக்க வேண்டும் தெரியுமா?

முட்டையை வேக வைக்க எப்போதும் போல் தண்ணீர், முட்டை அதை எடுக்கக் கரண்டி, குளிர்ச்சியான தண்ணீர் ஆகியவை போதும்.
முதலில் முட்டையை அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும். முட்டையைவிட ஒரு இஞ்ச் அளவுக்கு நீர் அதிகமாக இருக்க வேண்டும். முட்டையை வேக வைக்கும்போது அடுப்பின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.
தண்ணீர் கொதிநிலையை அடைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்துவிட்டு வெப்பம் வெளியேறாதவாறு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.
அப்படியே மூன்று நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருந்தால் குறைந்த அளவு வெந்திருக்கும். ஆறு நிமிடங்களாக இருந்தால் பாதியளவு வெந்திருக்கும். 10 நிமிடங்களாக இருந்தால் முழுமையாக வெந்திருக்கும். 12 நிமிடங்களைக் கடந்தால் கெட்டியான பதத்தில் வெந்துவிடும்.
பிறகு அவற்றை குளிர்ச்சியான நீரில் மூழ்கும்படி போட்டு வெப்பம் குறைந்ததும் எடுத்து உரிக்கலாம். உரிக்கும்போது இரண்டு முறை தட்டியும் உருட்டியும் உரித்தால் விரைவில் ஓடுகள் உரிந்துவிடும்.
First published:

Tags: Egg, Egg recipes