முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மழைக்காலங்களில் உணவு ஒவ்வாமையை தவிர்ப்பது எப்படி..? நிபுணர்கள் கூறும் ஆலோசனை

மழைக்காலங்களில் உணவு ஒவ்வாமையை தவிர்ப்பது எப்படி..? நிபுணர்கள் கூறும் ஆலோசனை

உணவு ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை

மழைக்காலத்தில் உணவு சார்ந்த அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் வகையில், சாதூர்யமான முறையில் நமது உணவுப் பழக்கம் அமைய வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மிகக் கடுமையான உஷ்ணம் கொண்ட கோடை காலத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதாக மழைக்காலம் இருக்கக் கூடும். ஆனால், அதே சமயத்தில் நீர் சார்ந்த, காற்று சார்ந்த மற்றும் உணவு சார்ந்த நோய்களும் தாக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு, அதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்படக் கூடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மிகுந்த பாதிப்புள்ளவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள் ஆகும்.

மழைக்காலத்தில் உணவு சார்ந்த அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் வகையில், சாதூர்யமான முறையில் நமது உணவுப் பழக்கம் அமைய வேண்டும். மழைக்காலத்தில் ஆரோக்கியமான, சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனைகள் இதோ…

சுத்தம் செய்வது

மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வீட்டில் தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும். குறிப்பாக, இதை செய்யும் முன்பாக நமது கைகளை சோப் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரம், காய்கறி வெட்டும் பலகை, கத்தி போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

பிரித்து வைப்பது

இறைச்சி, பால் பொருட்கள், கடல் சார்ந்த உணவுகள், முட்டை போன்றவற்றை பிற உணவுகளில் இருந்து பிரித்து வைப்பது. கடைகளில் இவற்றை வாங்கி வரும்போது தனிப் பைகளில் கொண்டு வர வேண்டும். ஃபிரிட்ஜிலும் தனித்தனியாக வைக்க வேண்டும். இறைச்சி வகைகளை ஃபீரிசரில் வைப்பது நல்லது.

மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு நிறைந்த உணவுகள்... நிபுணர்கள் எச்சரிக்கை

சமைப்பது

சரியான சூட்டில் உணவுகளை முறையாக வேக வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதில் உள்ள நுண்ணுயிரிகள் கொல்லப்படும். குறிப்பாக மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை 145 டிகிரி சூட்டில் சமைக்க வேண்டும். கோழி, வான்கோழி போன்றவற்றை 165 டிகிரி சூட்டில் சமைக்க வேண்டும்.

கூலிங் செய்வது நல்லது

உணவுகளை நீண்ட நேரத்திற்கு ரூம் டெம்பரேச்சரில் வைத்திருப்பதால் அதில் பாக்டீரியா வளரக் கூடும். ஆகவே தான் சமைத்த மற்றும் சமைக்காத உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து நாம் பயன்படுத்துகிறோம். சமைத்த உணவுகள் என்றால், சமைத்த 2 மணி நேரத்தில் அதை ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

வயிற்றில் தொற்று ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள்

* முறையாக சமைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி மற்றும் கடல் உணவுகள்.

* பச்சையான அல்லது முறையாக வேக வைக்காத பயறு வகைகள்.

* கொதிக்க வைக்காத பால் மற்றும் சூப் வகைகள்.

* ஈ அமரும் வகையில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருக்கப்படும் உணவுகள்.

First published:

Tags: Food poison, Monsoon Diseases