Home /News /lifestyle /

ஃபிட்டாக இருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் சாப்பிடவேண்டும்..? எப்போது ஆபத்தாக மாறும்..?

ஃபிட்டாக இருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் சாப்பிடவேண்டும்..? எப்போது ஆபத்தாக மாறும்..?

புரோட்டீன்

புரோட்டீன்

அதிக புரோட்டீன் உணவுகளை உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதுவாய் துர்நாற்றம், அஜீரணம் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

மனித வாழ்க்கைக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்று. கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புடன் சேர்த்து 3 முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களில் புரோட்டீனும் ஒன்றாகும். மேலும் இந்த சத்து ஒவ்வொரு மனித உயிரணுவின் கட்டுமான தொகுதி மற்றும் செல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. நம் ரத்தம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல புரோட்டின் உதவுகிறது.

தேவையான புரதச்சத்து உடலுக்கு கிடைக்காவிட்டால் சோர்வு, பிரெயின் ஃபாக் , காயத்திலிருந்து மெதுவாக மீள்வது உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி அனைத்திற்குமே பொருந்தும் என்பது நமக்கு தெரியும். புரோட்டினும் அப்படி தான். நம் உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் நல்லது என்றாலும் கூட அதற்காக அளவுக்கு அதிகமாக உணவில் புரோட்டினை சேர்த்து கொள்ள கூடாது. ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் சேர்த்து கொள்ள வேண்டுமென்பது உங்களுக்கு தெரியுமா.? ஒருவேளை அதிக அளவு புரோட்டின் எடுத்து கொண்டால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்..? இவற்றை பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்..

நமக்கு எவ்வளவு புரோட்டீன் தேவை?

ஒரு நாளைக்கு சராசரியாக பரிந்துரைக்கப்பட்டு உள்ள புரத நுகர்வு என்பது ஒரு நபரின் உடல் எடையில் ஒவ்வொரு 1 கிலோவிற்கும், 1 கிராம் விகிதமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு நபர் 60 கிலோ எடை இருக்கிறார் என்றால் அவர் சராசரியாக தினமும் 60 கிராம் அளவு புரதம் எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், வயது, பாலினம், கர்ப்பம் மற்றும் செயல்படும் நிலைகள் உள்ளிட்ட சில காரணிகளை பொறுத்து இந்த அளவுகளில் சிறிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.



உதாரணமாக தீவிரமான உடல் செயல்பாடு கொண்ட ஒருவருக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 1.6 கிராம் புரதம் வரை தேவைப்படலாம். ஒரு கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய் சற்று அதிக அளவு புரதம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும். வயதாகும் போது மக்கள் அதற்கு தகுந்தாற் போல புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டை தவிர்த்தாலே இதய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் - ஆய்வு

புரதம் அதிகம் சாப்பிட்டால் கெடுதலா?

ஆம், அதிக புரத உட்கொள்ளல் தீமை தான். அதிக புரோட்டின் உணவுகளை உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதுவாய் துர்நாற்றம், அஜீரணம் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். குறிப்பாக அதிக கொழுப்புள்ள இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள் மற்றும் வறுத்த அல்லது பதப்படுத்தப்பட்ட புரத உணவுகளை தவிர்ப்பது நல்லது. ரெட் மீட், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் உள்ள சில புரோட்டீன் டயட்கள் இதய நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.



சிறந்த புரத உணவுகள் :

முழு தானியங்கள், நட்ஸ்கள், பருப்பு வகைகள், கோழிகளின் முட்டைகள், நிறைவுற்ற கொழுப்பில்லா மாட்டிறைச்சி உள்ளிட்டவை ஹை-புரோட்டீன் உணவுகளை தேர்வு செய்ய நினைப்போருக்கு உதவும். அதே போல ஏற்கனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் புரத உட்கொள்ளலில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக புரத நுகர்வு கடும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Protein

அடுத்த செய்தி