உணவில் எவ்வளவு நெய் சேர்த்தால் உடலுக்கு நல்லது தெரியுமா ?

காட்சி படம்

கிச்சடி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு. இது குழந்தைகளுக்கும் எடையை அதிகரிக்க உதவும்.

 • Share this:
  காலை உணவுக்கு நிறைவான அதேசமயம் ஆரோக்கியமான உணவு என்றால் கிச்சடிதான். அதேபோல் சமைப்பதற்கும் எளிதான வேலை என்பதால் நேரமும் மிச்சம். கிச்சடியின் சுவை என்பது நாம் அதில் சேர்க்கும் பொருட்களில்தான் உள்ளது. கேரட், பட்டாணி, பீன்ஸ் என நாம் சேர்க்கும் பொருள்தான் சுவையே..அதோடு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தான் சுவையோடு சேர்ந்த மணமும் நம்மை சாப்ப்பிட தூண்டும். இப்படி ஒரு அருமையான உணவை செய்து வைத்தால் யாராலும் காலை உணவை தவிர்க்க முடியாது.

  நெய்யைச் சேர்ப்பது ரொட்டி அல்லது அரிசி உணவுகளை சாப்பிட செரிமானத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நெய் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. சருமத்திற்கும் நல்லது என்றும் கூறப்படுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.   எனவே சமையலில் நீங்கள் நெய் சேர்க்க விரும்பினால் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் பயன்படுத்தும் அளவை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். நெய் சரியான அளவில் உட்கொண்டால் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும். அதிகமானால் ஆபத்தும் கிடைக்கும். எனவே ஒரு தட்டு உணவுக்கு 1 தேக்கரண்டி நெய் ஏற்றது. கிச்சடியில் நெய்யைச் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும், ஆனால் அதைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் அளவில் கவனமாக இருக்க வேண்டும். நெய் வாங்கும்போதும் கவனமுடன் வாங்குங்கள். கலப்படமற்ற நெய்யை மட்டும் வாங்கவும். " என்று கூறியுள்ளார்.


  கிச்சடி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு. இது குழந்தைகளுக்கும் எடையை அதிகரிக்க உதவும். இருப்பினும், நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இருதய நோய்கள், செரிமான கோளாறுகள், டிஸ்லிபிடெமியா போன்ற ஆபத்துகளும் வரக்கூடும். எனவே மிதமான அளவு முக்கியமானது. அளவாக சாப்பிட்டால் அதன் ஆரோக்கியத்தை அளவில்லாமல் பெறலாம்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: