• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தினமும் கிரீன் டீ இத்தனை கப்தான் குடிக்க வேண்டுமாம்...

தினமும் கிரீன் டீ இத்தனை கப்தான் குடிக்க வேண்டுமாம்...

கிரீன் டீ

கிரீன் டீ

ஒரு நாளைக்கு 1-2 கப் கிரீன் டீ. குடிப்பது நல்லது. இது பசியைக் குறைப்பதோடு, கலோரி கட்டுப்பாடுடன் எடை இழப்புக்கு உதவுகிறது.

  • Share this:
கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. இந்த கீரின் டீயை பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப்கள் மட்டும் அருந்தி வரும் நிலையில், மற்றவர்கள் ஐந்து கப் வரை கூட குடிக்கின்றனர். ஆனால் ஒருவர் அருந்த வேண்டிய சரியான அளவு என்ன? இந்த கிரீன் டீயை எப்படி சுலபமாக போடலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

கிரீன் டீ செய்யத் தேவையான பொருட்கள்

பச்சை தேயிலை இலைகள்

அல்லது தேநீர் பை

தண்ணீர் - தேவையான அளவு

கிரீன் டீ


செய்முறை

முதலில் ஒரு கப் வெந்நீரை கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேயிலை இலைகளை அளந்து அதனுடன் சேர்க்கவும். தேநீர் பைகளை உபயோகித்தால், ஒரு கப் வெந்நீருக்கு ஒரு டீபாக் சிறந்தது. தேயிலை இலைகளை சூடான நீரில் 2-3 நிமிடங்கள் ஊற விடவும். இப்போது காய்ச்சிய டீயை ஒரு கோப்பையில் வடிகட்டவும்.

இதனுடன் சுவைக்காக சில துளிகள் தேன், எலுமிச்சை அல்லது இஞ்சியைச் சேர்த்து அருந்தலாம்... இந்த கிரீன் டீயை ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் உட்கொள்வது நல்லது அல்ல. கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிரம்பியிருந்தால் அதில் காஃபின் உள்ளது. அதனால் இதனை அதிகமாக அருந்தினால்  உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க... உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ...

இந்த கிரீன் டீயை வெற்று வயிற்றில் அருந்தக்கூடாது...உணவுக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகும் இதனை அருந்தலாம். ஒரு நாளைக்கு 1-2 கப் குடிப்பது நல்லது. இது பசியைக் குறைக்கிறது. எனவே கலோரி கட்டுப்பாடுடன் எடை இழப்புக்கு உதவுகிறது.

மேலும் படிக்க... இனி மாவு இல்லாமல் பூரி சுடலாம்.. எப்படி தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: