எளிய, நடுத்தர மற்றும் குடும்பத்தினர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரது வீட்டிலும் இன்று தவிர்க்க முடியாத எலெக்ட்ரிக் சாதனமாக இடம்பிடித்து உள்ளது குளிர்சாதனப் பெட்டி எனப்படும் ஃபிரிட்ஜ். பரபரப்பான பிசி வாழ்க்கைக்கு மத்தியில் ஒருசிலர் மீந்து போகும் உணவுகள் அல்லது அதிக அளவு சமைக்கப்பட்ட உணவுகளை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்துகிறார்கள்.
ஒரு சிலர் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவை அடுத்தடுத்த வேளைகளில் காலி செய்துவிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். சிலரோ பல வேளைகளுக்கு அந்த உணவை வைத்து வைத்து சாப்பிடுவார்கள். எனினும் தயாரிக்கப்பட்ட உணவை அதிக நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனினும் அதிகமாக இருக்கும் உணவுகளை ஃபிரிட்ஜில் எடுத்து வைக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதிகப்பட்சம் எவவ்ளவு நேரம் உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்ற கேள்வி எழுகிறது.
கல்வி சார்ந்த சோஷியல் மீடியா வீடியோக்களை அடிக்கடி உருவாக்கி பல ஐடியாக்கள் குறித்து விரிவாக ஆராயும் க்ரிஷ் அசோக், சமைத்த உணவை உங்கள் ஃபிரிட்ஜில் எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம் என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ மற்றும் சில கருத்துக்கள் அடங்கிய போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார். அதில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகள் ஊட்டச்சத்தை இழக்கின்றன என்பது நம் நாட்டில் இருக்கும் பிரபலமான தவறான கருத்து என்கிறார்.
இது நீங்கள் நினைப்பது போல் உண்மை இல்லை. எப்போதுமே சரியாக என்ன சத்துக்கள்? மற்றும் எவ்வளவு என்ற 2 பின்தொடர்தல் கேள்விகளை கேட்பது நல்லது. நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மிகவும் நிலையற்ற மற்றும் எளிதில் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களாக மாறிவிடும். ஆனால் வேடிக்கையான உண்மை என்னவென்றால் பெரும்பாலான ஊட்டச்சத்து இழப்பு சமைக்கும் போதே நிகழ்கிறது, ரெஃப்ஜிரேட் செய்யும் போது அல்ல என குறிப்பிட்டுள்ளார். வெப்பமே வைட்டமின்களை அழிக்கிறது, குளிர் அல்ல.
உண்மையில் காற்று புகாத கன்டெயினரில் ஸ்டோர் செய்யப்படும் போது பெரும்பாலான சமைத்த உணவுகள் குறைந்தப்பட்சம் 2-3 நாட்கள் வரையிலும் பல சந்தர்ப்பங்களில் 1 வாரம் வரையிலும் கெடாமல் இருக்கும். அதுவே ஃப்ரீஸர் என்றால் ஒருவேளை மின்வெட்டு இல்லை என்றால் 6 மாதங்கள் வரை நீடிக்கும். அனைத்து உயிரியல் நடவடிக்கைகளும் வெப்பநிலையுடன் குறைகிறது என கூறியுள்ளார் அசோக்.
View this post on Instagram
எனினும் தயாரிக்கப்பட்ட உணவை நீண்ட நாள் ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்பதில் சில விதிவிலக்குகள் உள்ளன. பிளெயின் குக்டு/ஸ்டீம்டு அரிசி சில நேரங்களில் குறைந்த வெப்பநிலையைப் பொருட்படுத்தாத பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம். எனவே ஃபிரிட்ஜில் வைத்தாலும் இதனை அதிகபட்சம் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது என்கிறார். நம்முடைய இந்திய உணவுகள் குளிர்சாதனப்பெட்டியில் சிலகாலம் ஸ்டோர் செய்து வைக்க ஏற்றதாக இருக்கின்றன. ஏனெனில் நம் உணவுகள் காரம், உப்பு மற்றும் புளிப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இவை மூன்றையுமே நுண்ணுயிரிகளை முற்றிலும் வெறுக்கும் என கூறியுள்ளார்.
இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரோஹினி பாட்டீல் கூறியிருப்பதாவது இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற கெட்டு போகும் உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்த சில நாட்கள் முதல் 1 வாரத்திற்குள் சாப்பிட வேண்டும். அதே நேரம் ரொட்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகாத உணவுகளை நீண்ட காலம் சேமிக்கலாம். ஒருசில உணவுகள் ஃபிரிட்ஜில் வைத்தாலும் 3 -4 நாட்களில் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படலாம். பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை, தோற்றத்தை மாற்றாது. எனவே சாப்பிட பாதுகாப்பான உணவா என தீர்மானிக்க முடியாமல் போகலாம் என்றார்.
Also Read : ஃப்ரிட்ஜூக்குள் இந்த உணவுப்பொருட்களை வைக்கவே வைக்காதீங்க.!
பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணம்:
எஞ்சிய சமைத்த உணவுகளை சூடாக இருக்கும் போது நாம் உடனடியாக ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. அறை வெப்பநிலை வந்த பிறகும் சில மணிநேரங்கள் கழித்து தான் வைக்கிறோம். இது நுண்ணுயிரி பெருக்கத்திற்கு சாதக சூழலை ஏற்படுத்துகிறத்து. சமைத்த சாதம் இதற்கு சரியான உதாரணம் என்றார் பாட்டீல். காற்று புகாத கன்டெய்னரில் மீதமுள்ளவற்றை மூடி வைப்பது, ஃபிரிட்ஜில் ஏர் கூலிங் அதிகம் அடிக்கும் இடத்தில் உணவுகளை வைப்பது, எஞ்சிய உணவுகளை முதலில் சாப்பிட முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் மூலம் உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சியை நிறுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food poison, Fridge, Refrigerator storage