முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹோட்டல் ஸ்டைல் தந்தூரி சிக்கன் செய்யனுமா..? அதற்கான மசாலா பொடி ரெசிபி..!

ஹோட்டல் ஸ்டைல் தந்தூரி சிக்கன் செய்யனுமா..? அதற்கான மசாலா பொடி ரெசிபி..!

தந்தூரி சிக்கன் மசாலா

தந்தூரி சிக்கன் மசாலா

tandoori chicken masala | சுவையான தந்தூரி சிக்கன் செய்ய இந்த ரகசியமான மசால பொடி இருந்தாலே போதும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரெஸ்டாரண்டுகளில் தந்தூரி சிக்கனை சாப்பிடும்போதெல்லாம் எப்படித்தான் இந்த சுவையில் சமைக்கிறார்களோ? என நீங்கள் யோசித்திருப்பீர்கள். அதில் தடவப்படும் மசாலா மட்டுமே அதன் ரகசியம். அந்த மசாலாவை வீட்டிலேயே எளிமையாக எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

ஸ்பைஸஸ் பொடி - 4 டீஸ்பூன்

சிவப்பு காய்ந்த மிளகாய் - 7

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தையம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

கருப்பு ஏலக்காய் - 4

பட்டை - 2 - 3

கிராம்பு - 15

ஜாதிக்காய் தோல் - 4

ஜாதிக்காய் - 1

திப்பிலி - 3 கிராம்

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

இஞ்சிப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை :

1. முதலில் ஜாதிக்காயை அம்மியில் நன்கு இடித்துக் கொள்ளுங்கள். முழுதாக போட்டால் அரைபடாது. இப்படி நீங்களே அரைபடாத பொருட்களை கண்டறிந்து இடித்துக் கொள்ளுங்கள்.

2. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பின்னர் அவை அனைத்தையும் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. மைய அரைத்ததும் சல்லடையில் கொட்டி சலித்தால், அரைபடாதவை மேலேயே தங்கிவிடும். நன்கு சலிக்கப்பட்ட பொடிதான் தந்தூரி பொடி.

5. அதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள். தந்தூரி சிக்கன் செய்யும் போதெல்லாம் இதைப் பயன்படுத்துங்கள். கடையில் வாங்கி சமைத்தாலும் இதன் சுவை கிடைக்காது.

First published:

Tags: Chicken masala, Chicken Recipes