ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓட்டலில் தரும் அதே சுவையில் சாம்பார் வைக்க வேண்டுமா..? இதுதான் அந்த இரகசியம்..!

ஓட்டலில் தரும் அதே சுவையில் சாம்பார் வைக்க வேண்டுமா..? இதுதான் அந்த இரகசியம்..!

சாம்பார்

சாம்பார்

சாம்பாரை சுவைக்கும்போதெல்லாம் எப்படிதான் இந்த சாம்பார் வைக்கிறார்களோ என ருசித்துக்கொண்டே சொல்லுவோம். அந்த ரகசியம் இன்னைக்கு உங்களுக்காக...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் வீட்டில் சாம்பார் வைத்தாலும் அதன் சுவை ஹோட்டல் சுவைக்கு ஈடு தராது. நமக்கும் ஹோட்டலில் அந்த சாம்பாரை சுவைக்கும்போதெல்லாம் எப்படிதான் இந்த சாம்பார் வைக்கிறார்களோ என ருசித்துக்கொண்டே சொல்லுவோம். அந்த சாம்பார் பொடி ரகசியம் இன்னைக்கு உங்களுக்காக... இந்த ரெசிபியை படியுங்கள்..!

தேவையான பொருள்கள் :

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ

கொத்தமல்லி - 300 கிராம்

சீரகம் - 100 கிராம்

துவரம் பருப்பு - 50கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

மிளகு - 25 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

செய்முறை

1. முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

2.கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

3. இதனை கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

Also Read : கீரை வடை செய்ய தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி..

4. வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

5. இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

6. இந்த சாம்பார் பொடியை காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

First published:

Tags: Food recipes, Sambar Recipe, Vegetarian Recipes