ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காரசாரமாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி பொடி அரைப்பது எப்படி..? ரெசிபி இதோ...

காரசாரமாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி பொடி அரைப்பது எப்படி..? ரெசிபி இதோ...

இட்லி பொடி

இட்லி பொடி

இந்த இட்லி பொடியில் நாம் பூண்டு சேர்க்க வில்லை காரணம் பூண்டு சேர்த்தால் இட்லி பொடி சீக்கிரமே கெட்டுப் போக வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் இட்லிக்கு சட்னி, சாம்பார் என செய்தாலும் இட்லி மிளகாய்ப்பொடி மருக்க முடியாத செம்ம காம்பினேஷன் தான். அதிலும் மினி இட்லியை நெய் விட்டு இட்லி பொடியில் பிரட்டி தாளித்து சாப்பிடப்படும் பொடி இட்லியில் கிடைக்கும் சுவையே தனிதான். மேலும் இட்லிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் அரைக்க நேரமில்லாத சமையத்தில் சமாளிக்க உதவியாக இருக்கும். என்னதான் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் இட்லி பொடிகள் கிடைத்தாலும் வீட்டில் ஃபிரெஷாக அரைக்கும் பொடிக்கு வாசனையே தனி. அப்படிப்பட்ட சுவையான இட்லி பொடியை வீட்டில் எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

எள்ளு - 1/4 கப்

வரமிளகாய் - 10

கருவேப்பிலை - 1 கொத்து

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். அனைத்தையும் தனித்தனியாக போட்டு வறுத்தால் நல்லது. ஒவ்வொன்றையும் கீழே குறிப்பிட்டுள்ள பக்குவத்தில் வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்தப்பின் அனைத்தையுமே ஒரு தட்டில் கொட்டி பரப்பி ஆற விட வேண்டும். இப்படி செய்தால் இட்லி பொடியின் சுவை நினைத்த மாதிரியே வரும்.

- உளுந்தும் கடலை பருப்பும் பொன்னிறமாக வறுபட வேண்டும்.

- எள்ளு படபடவென பொறிந்ததும், தட்டில் கொட்டிவிட வேண்டும்.

- வரமிளகாயை கடாயில் போட்டு சூடு செய்து எடுத்தால் போதுமானது. கஷ்மீரி மிளகாய் சேர்த்தால் பொடிக்கு நல்ல கலர் கிடைக்கும்.

- கறிவேப்பிலை காய்ந்ததாக இருக்கும் பட்சத்தில் கடாயில் போட்டு சூடு செய்து எடுத்தால் போதுமானது. பச்சை கறிவேப்பிலையாக இருக்கும் பட்சத்தில் தண்ணீரில் கழுவி, தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, கடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும். ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். காரணம் சிறிதளவு தண்ணீர் இருந்தால் கூட பொடி சீக்கிரம் கெட்டுப் போக நிறைய வாய்ப்புள்ளது.

- இறுதியாக சீரகம் மிளகு சேர்த்து கருகாமல் வறுப்பது அவசியம்.

- கடைசியாக இந்த பொடிக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

- அரைக்கும் பொழுது பொடி மேலும் சூடாயிருக்கும். அதனால் அதில் இருக்கு அந்த மீதி சூட்டையும் தனிக்க தட்டில் கொட்டி நன்கு ஆறிய பின் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். கொட்டி வைக்கும் கண்ணாடி பாட்டிலிலும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஒருவேளை கழுவினால் சுத்தமான துணியை வைத்து துடைத்தபின் காயவைத்து கொட்டி வையுங்கள்.

குறிப்பு : இந்த இட்லி பொடியில் நாம் பூண்டு சேர்க்க வில்லை காரணம் பூண்டு சேர்த்தால் இட்லி பொடி சீக்கிரமே கெட்டுப் போக வாய்ப்புள்ளது. கொஞ்சமாக அரைக்கும் பட்சத்தில் விரும்பினால் 5 - 8 பல் பூண்டு பல்லை நசுக்கிவிட்டு எண்ணெயில் பொந்நிறமாக வரும்வரை வருத்து ஆறிய பின் பொடியுடன் போட்டு அரைத்து கொள்ளுங்கள். பூண்டை தோலுடனும் சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Food recipes, Idli, Idly podi