பெரும்பாலானோர் ஹோட்டல்களில் டிபன் சாப்பிட நினைப்பதற்கு முக்கிய காரணம் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னிகள் தான். அதிலும் குறிப்பாக ஹோட்டலில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியின் சுவை எப்படி அரைத்தாலும் வீட்டு சட்னியில் வராது. அப்படி ஹோட்டல்களில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியில் என்னதான் போட்டு அரைக்கிறார்கள்? அந்த சீக்ரெட் இங்கிரீடியெண்ட் என்ன? தொடர்ந்து படியுங்கள்.
தேவையானப் பொருட்கள் :
தேங்காய் துருவல் ( நன்றாக தோல் உறித்தது ) - 1 கப்
உடைத்த கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1 முதல் 2 (காரத்திற்கேற்ப)
இஞ்சி - 1 சிறிய துண்டு
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
செய்முறை :
தேங்காய் துருவல், உடைத்த கடலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்ட பின்னர், எண்ணெயில் தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்தால் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான தேங்காய் சட்னி தயார்.!
குறிப்பு : இந்த சட்னி அரைக்கும் பொழுது தேங்காய் துருவலில் தேங்காய் ஓடு கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுவையின் முக்கிய ரகசியமே அதுதான். பொதுவாக மற்ற சட்னியைக் காட்டிலும் தேங்காய் சட்னியை, சாப்பிடும்போது அவ்வபோது அரைத்துக் கொள்வது சிறந்தது. ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப் படுத்தினால் சுவை பாழாகிவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coconut, Food recipes