Home /News /lifestyle /

ரோட்டு கடை குருமா இனி வீட்டிலே செய்யலாம்.. இதுதான் அதன் ரகசியம்!

ரோட்டு கடை குருமா இனி வீட்டிலே செய்யலாம்.. இதுதான் அதன் ரகசியம்!

ரோட்டு கடை குருமா

ரோட்டு கடை குருமா

ரோட்டு கடை தொடங்கி 5 ஸ்டார் ஹோட்டல் வரை அவர்களின் யுனிக் ரெசிபிக்களை பல யூடியூப் சேனலில் பார்க்க முடிகிறது.

    ரோட்டுக்கடையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தரப்படும் சால்னாவை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் இதை குருமா என்றும் சொல்வார்கள். என்ன தான் வீட்டில் எல்லா காய்கறியும் போட்டு ஆரோக்கியமாக மணக்க மணக்க குருமா வைத்தாலும் சரி வீட்டில் இருப்பவர்கள் அதை தொட்டு தான் சாப்பிடுவார்கள். இதுவே ஹோட்டல் சால்னா, குருமா என்றால் ஊற்றி ஊற்றி சாப்பிடுவார்கள். அப்படி என்ன தான் அந்த குருமாவில் இருக்கிறது என்றால் அதன் வாசனையும் அதன் ருசியும் தான். பெரிய பெரிய ஹோடல்களை காட்டிலும் ரோட்டுக்கடை சால்னாவை ஆண்கள், குழந்தைகள் என பலரும் விரும்பி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சில ஹோட்டல் சமையல் கலைஞர்களிடம் அதன் ரகசியம் கேட்டால் எளிதில் சொல்லிவிட மாட்டார்கள்.

    அந்த ரகசியம் தான் அவர்களின் வியாபாரம் என்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ரோட்டுக்கடை தொடங்கி 5 ஸ்டார் ஹோட்டல் வரை அவர்களின் யுனிக் ரெசிபிக்களை பல யூடியூப் சேனலில் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் வெங்கடேஷ் பட், செஃப் தாமு, செஃப் தீனா போன்ற 5 ஸ்டார் சமையல் கலைஞர்களே அந்த ரெசிப்பிகளை செய்து காட்டி யூடியூபில் வீடியோவாக வெளியிடுகின்றனர்.

    சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

    அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது ரோட்டுக்கடை சால்னா அல்லது குருமாவின் செய்முறை ரகசியம். இந்த வீடியோ அபூர்வாஸ் நளபகம் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம், தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, எண்ணெய்.

    செய்முறை:

    முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து மசாலாவை அரைத்து கொள்ள வேண்டும்.

    சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

    பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கடற்பாசி,சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.



    பின்பு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

    இப்போது அதில் மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான பலரும் விரும்பும் ரோட்டுக்கடை சால்னா தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Chutney, Food recipes, Hotel Food, Pure veg

    அடுத்த செய்தி